ஈரோடு மாவட்டம் சாத்தியமங்கலத்தில் கார்த்திக்  என்பவர் "டி.ஆர். கார்த்திக் சீட் இந்தியா பிரைவேட் லிமிடெட்" என்ற பெயரில் நிதி நிறுவனம் நடத்தி வந்தார். இந்த நிறுவனத்தில் 350க்கும் மேற்பட்டோர் இணைந்திருந்த நிலையில், அவர்கள் ஒவ்வொருவரும் 5 லட்சம் முதல் 2 கோடி வரையில் முதலீடு செய்திருந்தனர். இந்த நிலையில், நிறுவனர் கார்த்திக்  கடந்த 4 மாதங்களுக்கு முன்பாக  தலைமைறைவாகிட்டார். தற்போது வரை அவர் எங்கு இருக்கிறார் என்ற விவரம் யாருக்கும் தெரியவில்லை. இந்த தகவல் அறிந்து முதலீடு செய்திருந்த நபர்கள் அதிச்சியடைந்தனர். 

Advertisment

இது தொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள் இரண்டு மாதங்களுக்கு முன்பாக மாவட்ட கண்காணிப்பாளரிடம் புகார் அளித்தனர். பின்பு அந்த புகார் மனு மாவட்ட குற்றவியல் பிரிவுக்கு அனுப்பப்பட்டது. அடுத்ததாக அந்த மனு பொருளாதார குற்றப் பிரிவுக்கு அனுப்பப்பட்டது. தற்போது பொருளாதார குற்ற பிரிவினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இருப்பினும் இந்த வழக்கில் இதுவரையிலும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படவில்லை. இந்த விசாரணையில் இதுவரையில் குற்றம் சாட்டப்பட்ட நபர்கள் யாரும் இன்னும் கைது செய்யப்படவில்லை. 

Advertisment

இந்த நிதி நிறுவனத்தின் முதலாளியும் இன்னும் தலைமறைவாகவே தான் உள்ளார் என்றும் கூறப்படுகிறது. இந்த நிறுவனத்தின் மூலம் 60 கோடி ரூபாய் வரையிலும் மோசடி செய்யப்பட்டுள்ளதாவும் கூறப்படுகிறது. ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் நிதிநிறுவனம் நடத்தி, பண மோசடியில் ஈடுபட்டுள்ளதாக வந்த புகாரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.