கலிங்கப்பட்டி சுற்றியுள்ள கிராமங்களுக்கு 1 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியதோடு, 73 இலட்சம் ரூபாய் மதிப்பிலான வைகோ எம்.பி. தொகுதி மேம்பாட்டு திட்டப் பணிகளை துரை வைகோ எம்.பி திறந்து வைத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது....
கலிங்கப்பட்டி ஊராட்சி மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி மற்றும் குருவிகுளம் ஒன்றியத்தில் வைகோ எம்.பி. நிதியில் கட்டப்பட்ட திட்டங்கள் தொடக்க விழாக்களில் பங்கேற்றேன்.
வைகோவைத் தந்த கலிங்கப்பட்டி ஊராட்சி, தமிழ்நாடு அரசின் சமூக நல்லிணக்க விருது பெற்ற ஊராட்சியாகும். அதன் காரணமாக ரூபாய் ஒரு கோடி நிதியினை தமிழ்நாடு அரசு ஊக்கத் தொகையாக வழங்கியுள்ளது. அந்த நிதியில் மேற்கொள்ளப்பட உள்ள வேலைகளுக்கான அடிக்கல் நாட்டினேன். கலிங்கப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட 12 கிராம மக்களும் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.
1970 இல் வைகோ ஊராட்சி மன்றத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டது முதல், கடந்த 56 ஆண்டுகளாக கலிங்கப்பட்டிக்கு அவர் பெற்றுத் தந்துள்ள திட்டங்களையும், இன்று விலைமதிப்பற்று விளங்கும் பல ஏக்கர் சொந்த நிலங்களை ஆரம்ப சுகாதர நிலையம் அமைத்திடவும், துணைமின் நிலையம் அமைத்திடவும் இலவசமாக வழங்கியதையும் அரசு மேல்நிலைப்பள்ளியை உருவாக்கி அதன் உயர்வுக்கு பாடுபட்டு வருவதையும் விவரித்தேன்.
கலிங்கப்பட்டி ஊராட்சிக்கு ரூபாய் 2 கோடியே 72 லட்சம் மதிப்பீட்டில் முழுமையாக வீட்டுக்கு வீடு குடிநீர் திட்டத்தை நிறைவேற்றுகின்ற ஊராட்சியாக கலிங்கப்பட்டி ஊராட்சி விளங்குகிறது என்பதையும் மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டேன். இதற்கான, நிதியினைத் திரட்டிட நான் மேற்கொண்ட முயற்சிகளை விவரித்தேன். கலிங்கப்பட்டி ஊராட்சியில் மட்டும் வைகோ எம்பி நிதி, ஊராட்சி ஒன்றிய பொது நிதி, 15 வது நிதிக் குழு நிதி, மாவட்ட குழு உறுப்பினர் நிதி, சட்டமன்ற உறுப்பினர் நிதி, ஒன்றியக் குழு உறுப்பினர் நிதி ஆகியவற்றின் மூலம் ரூபாய் 5.50 கோடி மதிப்பிலான பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
12 கிராமங்களைக் கொண்ட இந்த ஊராட்சியில், மிகவும் சிறு கிராமங்களான 11 கிராமங்களுக்கு வீட்டுக்கு வீடு குடிநீர் வழங்கும் திட்டத்தைமுதலில் நிறைவு செய்திடவும், கடைசியாக தாய்க் கிராமமான கலிங்கப்பட்டி கிராமத்திற்கு இத்திட்டத்தை செயல்படுத்தவும் திட்டமிட்டோம். அதன் விளைவாக, கலிங்கப்பட்டிக்கு நிதிப் பற்றாக்குறை ஏற்பட்டது. எனினும் நான் மேற்கொண்ட பல்வேறு முயற்சிகளுக்குப் பின்னர் முழுமையாக நிதி பெறப்பட்டு பணி நிறைவு பெறும் நிலையில் உள்ளது என்பதையும் தெரிவித்தேன்.
சொந்த ஊர் மக்களைச் சந்தித்ததையும், அவர்களுடன் என் உணர்வுகளைப் பகிர்ந்து கொள்ளக் கிடைத்த வாய்ப்பையும் பெற்றதில் மனம் மகிழ்ந்தேன். முன்னதாக மைப்பாறை கிராமத்தில், வைகோ எம்பி நிதியில் ரூபாய் 29 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி திட்டத்தை திறந்து வைத்தேன். தொடர்ந்து சத்திரப்பட்டி ஊராட்சி சாமிநாதபுரம் கிராமத்தில் வைகோ எம்.பி. நிதியில் ரூபாய் 22 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட பல்நோக்கு சமுதாயக் கூடத்தினை திறந்து வைத்தேன்.
நிறைவாக இரவு 9 மணி அளவில் சிதம்பராபுரம் கிராமத்தில் 22 லட்சம் ரூபாய் மதிப்பில் வைகோ எம்பி நிதியில் கட்டப்பட்ட பல்நோக்கு சமுதாயக் கூடத்தினை திறந்து வைத்தேன். இன்று மட்டும் 1 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியதோடு, 73 இலட்சம் ரூபாய் மதிப்பிலான வைகோ எம்.பி. தொகுதி மேம்பாட்டு திட்டப் பணிகளையும் திறந்து வைத்தேன்.அனைத்து கிராமங்களிலும் பொதுமக்கள் திரளாக பங்கேற்றுச் சிறப்பித்தனர்.நிகழ்வில் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/2026/02/28/2026-02-28t064820155z-nlogo-2026-02-28-12-18-18.jpg)
/nakkheeran/media/media_files/2026/03/10/du-2026-03-10-10-56-18.jpg)