found in container - using secret room Photograph: (ERODE)
ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்த விஜயமங்கலம் சுங்கச்சாவடி அருகே பெருந்துறை போலீசார் வழக்கம்போல் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது கர்நாடக மாநிலத்தில் இருந்து இரும்பு பீரோ மற்றும் கட்டில் உள்ளிட்ட வீட்டு சாமான்களை ஏற்றிக் கொண்டு கோவை நோக்கிச் சென்று கொண்டிருந்த கன்டெய்னர் லாரி ஒன்று வந்தது.
சந்தேகத்தின் அடிப்படையில் போலீசார் அந்த கன்டெய்னர் லாரியை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர்.அப்போது கண்டெய்னருக்குள் சோதனை செய்தபோது ரகசிய அறை இருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். ரகசிய அறையை திறந்து சோதனை செய்தபோது அதில் 745 கிலோ கிராம் எடை கொண்ட தடை செய்யப்பட்ட புகையிலை மற்றும் குட்கா பொருட்களை பொருட்களை பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது.
பின்னர் லாரி டிரைவரை பிடித்து விசாரித்த போது அவர் கர்நாடக மாநிலம், மாண்டியா மாவட்டம், கென்னாலூர் கிராமத்தைச் சேர்ந்த ரவி (30) என தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து போலீசார் ரவியை கைது செய்து கண்டெய்னரில் ரகசிய அறையில் இருந்த புகையிலை மற்றும் குட்கா பொருட்களை லாரியுடன் பறிமுதல் செய்தனர். பின்னர் ரவியை பெருந்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த கடத்தல் விவகாரத்தில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Follow Us