'தற்கொலை எண்ணம் தவறானது'- மன அழுத்தமோ தற்கொலை எண்ணமோ ஏற்பட்டால் அதிலிருந்து நீங்கி விடுபட தமிழக சுகாதார சேவை உதவி மையம் 104-ஐ அழைக்கவும்.

Advertisment

தூத்துக்குடியில் முறையற்ற தொடர்பில் இருந்த இருவர் காவல் நிலையத்திற்கு முன்பே காரில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அடுத்துள்ள குலசேகரன்பட்டினம் காவல் நிலையத்திற்கு முன்பு நின்று கொண்டிருந்த காரில் இருந்து ஒரு ஜோடி சடலங்களாக மீட்கப்பட்டனர். விசாரணையில் அவர்கள் நெல்லையைச் சேர்ந்த பார்வதி-தங்கம் என்பது தெரியவந்தது. போலீசார் நடத்திய விசாரணையில் இருவரும் முறையற்ற தொடர்பில் இருந்ததாகவும் இரு வீட்டிற்கும் முறையற்ற தொடர்பு தெரிய வந்ததால் எச்சரித்த நிலையில் இருவரும் காவல் நிலையத்திற்கு முன்பு வந்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

இருவரது உடல்களும் மீட்கப்பட்டு மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் இந்த சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

Advertisment