முன்னாள் மத்திய அமைச்சர் மு.க. அழகிரி உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அதாவது, நில அபகரிப்பு புகாரில் இருந்து தன்னை விடுவிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்நிலையில் இந்த மனு திபதி முஷ்ரா அமர்வில் இன்று (08.12.2025) விசாரணைக்கு வந்து.
அப்போது மு.க. அழகிரி சார்பில் வாதிடுகையில், “இந்த விவகாரத்தில் தன்னுடைய பெயர் தவறுதலாக இணைக்கப்பட்டது. இதில் மனுதாரோ, எதிர் மனுதாரோ கிடையாது. உயர்நீதிமன்றம் எங்களுடைய தரப்பு கருத்துக்கள் எதையுமே கேட்காமல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டது. இதனைப் பதிவு செய்து கொண்ட திபதி முஷ்ரா இந்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.
மேலும் இந்த விவகாரம் தொடர்பாக நீதிபதிகள், “விசாரணை நீதிமன்றத்தில் ஏன் இந்த வழக்கைச் சந்திக்கக் கூடாது?. அங்கேயே வழக்கைச் சந்திக்கலாமே?. சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகி உரிய உத்தரவுகளைப் பெறலாம். அதோடு இந்த விவகாரத்தில் தாங்கள் தலையிட விரும்பவில்லை” என்று கூறி மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/12/08/sc-2025-12-08-15-38-47.jpg)