Former Prime Minister khaleda zia of Bangladesh passes away
வங்கதேச நாட்டின் முன்னாள் பிரதமர் கலிதா ஜியா (80) உடல்நலக் குறைவால் இன்று (30-12-25) காலமானார்.
வங்கதேசத்தின் முதல் பெண் பிரதமர் என்ற பெருமையை பெற்ற கலிதா ஜியா, இதயம், நுரையீரல் தொற்று, சிறுநீரகம் பாதிப்பு, நீரிழிவு போன்ற நோய் தொற்றுகளால் பாதிக்கப்பட்டு வந்துள்ளார். இதனால் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அவர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்தார். கடந்த சில வாரங்களாக மிகவும் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வந்த கலிதா இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
1991- 1996, 2001-2006 என இருமுறை வங்கதேச பிரதமராக பதவி வகித்த கலிதா ஜியாவின் மறைவையொட்டி, பல உலகத் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். ஏற்கெனவே வங்கதேசத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சனைகள், கலவரங்கள் நீடித்து வரும் நிலையில் அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெறவுள்ளது. முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா வங்கதேசத்தை விட்டு வெளியேறி இந்தியாவில் தஞ்சம் புகுந்துள்ள நிலையில், கலிதா ஜியாவின் வங்கதேச தேசியவாத கட்சி தான் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்று கூறப்படுகிறது.
Follow Us