2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்க நெருங்க அரசியல் கட்சிகள் களப்பணிக்கு தயாராகிவிட்டது. இந்த நேரத்தில் எஸ்.ஐ.ஆர் வந்ததும், தங்கள் கட்சிகளின் நிரந்தர வாக்குகளை காப்பாற்றிக் கொள்ள அரசியல் கட்சி பிரமுகர்களை களப்பணிக்கு அனுப்பி உள்ளனர். மற்றொரு பக்கம், வாக்காளர்களை தங்கள் பக்கம் இழுத்து வரும் முயற்சிகள் தீவிரமடைந்து வருகிறது.
அதன்படி, புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆளும் திமுகவைவிட எதிர்கட்சியான அதிமுக அதிவேகமாக களப்பணிக்கு தங்கள் உறுப்பினர்களை தயார்படுத்தும் வேலைகள் தீவிரமாக உள்ளது. வாக்குச்சாவடிக்கு சுமார் 20 பேரை பொறுப்பாளர்களாக நியமித்து அவர்களின் பணிகள் குறித்து வகுப்புகளும் நடத்தப்பட்டு வருகிறது. புதுக்கோட்டை வடக்கு மாவட்டத்தில் உள்ள விராலிமலை, புதுக்கோட்டை, கந்தர்வக்கோட்டை, ஆலங்குடி ஆகிய 4 தொகுதிகளில் அதிமுக மாவட்டச் செயலாளர் விராலிமலை விஜயபாஸ்கர் அதிவேகம் காட்டி வருகிறார். வாக்குச் சாவடி முகவர்களை நியமித்து சில மாதங்களில் பல முறை அவர்களை சந்தித்து உற்சாகப்படுத்தி வருகிறார்.
இந்த நிலையில், இன்று ஆலங்குடி சட்டமன்றத் தொகுதியில் எல்.என்.புரம், கீரமங்கலம், ஆவணத்தான்கோட்டை ஆகிய இடங்களில் வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் பயிற்சி முகாம் நடந்தது. இதில் கலந்து கொண்ட மாவட்டச் செயலாளர் விஜயபாஸ்கர் பொறுப்பாளர்களை உற்சாகப்படுத்த அனைவருக்கும் பரிசுப் பொருள் வழங்கியதுடன், நாம் நமது வாக்குகளை பெறுவதில் கவனமாக இருக்க வேண்டும். எஸ்ஐஆர் படிவங்களை பூர்த்தி செய்ய முழுமையாக உதவ வேண்டும். வாக்காளர் பெயர்கள் விடுபடாமல் கவனித்துக் கொள்வது நமது கடமை. எஸ்ஐஆர் படிவம் கிடைக்கவில்லை என்றால் உடனே புகார் செய்து காலங்கடத்தாமல் படிவங்களை வாங்கிக் கொடுக்க வேண்டும் என்றார்.
மேலும், எடப்பாடி சுற்றுப்பயணத்தின் போது புதுக்கோட்டையில் அறிமுகம் செய்த ‘உருட்டு திருட்டு’ சுரண்டல் சீட்டை பொறுப்பாளர்களுக்கு கொடுத்து சுரண்டச் சொல்லி அதில் திமுகவின் உருட்டு எண் (வாக்குறுதி எண்) அதற்கான வாக்குறுதி. இதை திமுக சொன்னது செய்யவில்லை என்பதை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். இது போல ஒவ்வொரு பகுதிக்கும் சீட்டுகள் வரும் அதை மக்களிடம் கொடுத்து சுரண்டச் சொல்லி இந்த வாக்குறுதி நிறைவேற்றவில்லை என்பதை மக்கள் மனதில் பதிவ வைக்க வேண்டும் என்றார் . இதே போல ஒவ்வொரு கூட்டத்திலும் வழங்கப்பட்டு வருகிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/11/15/vji-2025-11-15-23-41-35.jpg)