Advertisment

த.வெ.க.வில் இணையும் முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம்?

vaithilingam

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழு கூட்டம், சென்னை வேப்பேரியில்  கடந்த நவம்பர் மாதம் 24ஆம் தேதி (24.11.2025) நடைபெற்றது. இந்த கூட்டத்தில், அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழுவானது அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு கழகமாக மாறி இருப்பதாக ஓ.பன்னீர்செல்வம் முன்னிலையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும், அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழுவின் இணை ஒருங்கிணைப்பாளருமான வைத்திலிங்கம் பேசுகையில், “மூன்றரை வருடம் இந்த (அதிமுக) கட்சி ஒன்றிணைய வேண்டும் என்று அமைதியாக அமைதி புரட்சி நடத்திக் கொண்டிருந்தார் ஓபிஎஸ். 

Advertisment

இன்னும் ஒரு மாதத்தில்  கட்சி ஒன்றிணையவில்லை என்றால் ஒரு வியூகத்தை அமைத்து, ஓ.பி.எஸ். தலைமையிலான உரிமை மீட்பு குழு, கட்சியாக மாறி மாபெரும் வெற்றியை பெறும். நமக்கு அதிமுக தொண்டர்கள் நமது உடன்பிறப்புகள். அதற்கு இடையூராக எந்த சக்தி இருக்கிறதோ அந்த தீய சக்தியை விரட்டி அடிப்பதுதான் நமது ஒரே நோக்கமாக இருக்கும் என்பதைக் கூறி ஒற்றுமையாக இருங்கள். இன்னும் ஒரு மாதத்தில் நாம் வெற்றியை நோக்கி செல்வோம்” எனப் பேசியிருந்தார். 

Advertisment

இந்நிலையில் வைத்திலிங்கம் த.வெ.க.வில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது அடுத்தக்கட்டமாக தனது அரசியல் நகர்வாக  வைத்திலிங்கம் த.வெ.க.வில் இணைய உள்ளதாக கூறப்படுகிறது. முன்னதாக அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் த.வெ.க.விற்கு  சென்றது போன்றே வைத்திலிங்கமும் செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  அதாவது வைத்திலிங்கமும், செங்கோட்டையனைப் போன்றே, தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்து விட்டு த.வெ.க. வில் 

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு சட்டமன்றத் தொகுதியின் உறுப்பினராக பதவி வகித்து வைத்திலிங்கம் அதிமுவின் முக்கிய பிரபல பிரமுகராகவும், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரிய நபராக வலம் வந்தவர். கடந்த 2022இல் அதிமுக ஒற்றை தலைமை தொடர்பான பிரச்சனை எழுந்த போது ஓ.பி.எஸ். ஆதரவாளராக இருந்தார். அதன்பின்னர் அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழு இணை ஓருங்கிணைப்பாளராக செயல்பட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

admk AIADMK MLA orathanadu Tamilaga Vettri Kazhagam tvk vijay vaithiyalingam
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe