சென்னையில் முன்னாள் திமுக எம்பியின் கார் கண்ணாடி உடைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

சென்னை தியாகராயநகரில் உள்ள ஹபீபுல்லா சாலையில் திமுகவின் முன்னாள் தூத்துக்குடி எம்பியான ஜெயதுரை தனியார் மருத்துவமனையை நடத்தி வருகிறார். நேற்று மாலை வேளையில் அவரது மருத்துவமனைக்கு வந்த 20-க்கும் மேற்பட்டோர் முன்னாள் எம்பி ஜெயதுரையை கேட்டு அங்கிருந்த ஊழியர்களை மிரட்டியதாக கூறப்படுகிறது.

Advertisment

பின்னர் அங்கு நின்றிருந்த காரை அடித்து உடைத்ததாகவும் கூறப்படுகிறது. தாக்குதலில் காரினுடைய கண்ணாடி முழுமையாக  சேதமடைந்துள்ளது. இதுதொடர்பாக முன்னாள் எம்பி தரப்பில் பாண்டிபஜார் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அந்த புகார் அடிப்படையில் சிசிடிவி காட்சிகளைக் கைப்பற்றி விசாரணை செய்ததில் தாக்குதலுக்கு காரணம் முன்னாள் எம்பி ஜெயதுரையினுடைய சொந்த சகோதரரான வேலுமணி என்பது தெரிந்தது.

வடபழனியில் புத்தூர் மாவுக்கட்டு என்ற ஒரு மருத்துவமனையை வைத்திருக்கும் வேலுமணி அதிமுகவில் பொறுப்பில் இருக்கிறார். போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை வந்து மேற்கொண்டு வருகின்றனர். சகோதரர்கள் இருவருக்கும் இடையே ஏற்கனவே பிரச்சனை இருந்து வந்ததாகவும் போலீசார் தரப்பில் கூறப்படுகிறது. இருப்பினும் தாக்கிய நபர்கள் யார் யார்? என்ன காரணமாக இந்த தாக்குதல் நடந்தது என்ற தகவல்களை போலீசார் விசாரித்து வருகின்றனர். 

Advertisment