'Former councilor's wife ; driver escapes' - stir in Coimbatore Photograph: (kovai)
கோவையில் முன்னாள் அதிமுக கவுன்சிலரின் மனைவி வாகன ஓட்டுனரால் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
கோவை மாவட்டம் துடியலூர் அடுத்துள்ள பன்னிமடை ஊராட்சியின் முன்னாள் தலைவரும், அதிமுக முன்னாள் மாவட்ட கவுன்சிலருமானவர் கவி சரவணகுமார். தன்னுடைய மனைவி மகேஸ்வரியுடன் வசித்து வருகிறார். 47 வயதான மகேஸ்வரியை இன்று காலை 10 மணியளவில் வீட்டில் வாகன ஓட்டுனராக பணியாற்றி வந்த சுரேஷ் பவர் மகேஸ்வரியை கழுத்தில் கத்தியால் குத்தி கொடூரமாகக் கொலை செய்துள்ளார். அங்கிருந்து தப்பிச் சென்றவர் வடவள்ளி காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.
மனைவி கொலை செய்யப்பட்டதை அறிந்து வீட்டிற்கு வந்த கவி சரவணகுமார் தடாகம் காவல்துறைக்கு தகவல் கொடுத்தார். உடனே அங்கு வந்த போலீசார் படுகொலை செய்யப்பட்ட மகேஸ்வரி உடலில் மீட்டு பிரேப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். வாகன ஓட்டுனர் சுரேஷிடம் போலீசார் கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர். இந்த கொலை சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Follow Us