பரபரப்பான அரசியல் சூழலில் சட்டப்பேரவையில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினை, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், கடந்த 20ஆம் தேதி சந்தித்து பேசியிருந்தா. அதாவது சட்டபேரவையில் அமைச்சர்களின் பதிலுரை முடிவடைந்த பிறகு முதல்வர் அவைக்குள் வரும் போது அவரை பார்ப்பதற்கு வாயில் அருகே ஓ. பன்னீர்செல்வம் காத்திருந்து முதலல்வர் மு.க. ஸ்டாலினை அவரது அறையில் அறையில் சுமார் 10 நிமிடங்கள் சந்தித்து பேசியிருந்தார். இது மரியாதை நிமித்தமான சந்திப்பு என்று பொதுவாக சொல்லப்பட்டாலும் இந்த சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்பட்டது.
இது குறித்து ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேட்டியளிதார். அதில், “திமுகவின் ஆட்சி சிறப்பாக நிறைவு பெற்றதன் காரணமாக முதல்வர் மு.க. ஸ்டாலினை சந்தித்து அவருக்கு என்னுடைய வாழ்த்துகளை தெரிவித்துள்ளேன். இன்றைக்கு இருக்கின்ற அரசியல் சூழ்நிலை, கடந்த 5 ஆண்டுக்கால ஆட்சியின் நிலை, தமிழகத்திற்கு செய்த சாதனைகள் எல்லாம் மக்களின் மனதில் ஆழமாக பதிந்துள்ளது. மீண்டும் திமுக ஆட்சிக்கு வரக்கூடிய வாய்ப்பு திமுகவிற்கு உள்ளது” எனத் தெரிவித்திருந்தார்.
இத்தகைய சூழலில் தான் ஒ.பன்னீர்செல்வம் முதல்வர் மு.க. ஸ்டாலினை சந்தித்து திமுகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது. மேலும், தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துவிட்டு ஒ.பன்னீர்செல்வம் திமுகவில் இணைய உள்ளதாக தகவல் கூறப்பட்டது. இந்நிலையில் சென்னையில் உள்ள திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவரும், தமிழக முதல்வருமாக மு.க. ஸ்டாலினைச் சந்தித்து, ஓ.பன்னீர்செல்வம் தன்னை திமுகவில் இணைத்துக் கொண்டார். அவருக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் பொன்னாடை போர்த்தி வரவேற்றார். மேலும், முன்னாள் எம்.பி.யும், ஓ.பன்னீர்செல்வத்தின் மகனுமான ஓ.பி. ரவிந்தரநாத், ஓ.பன்னீர்செல்வத்தின் அவரது ஆதரவு எம்.எல்.ஏ. ஐயப்பனும் திமுகவில் இணைத்துக் கொண்டனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2026/02/27/ops-mks-dmk-join-2026-02-27-09-53-18.jpg)