இந்துஸ்தானை பாதுகாக்க இந்துக்கள் குறைந்தபட்சம் 3 முதல் 4 குழந்தைகளையாவது பெற்றெடுக்க வேண்டும் என பா.ஜ.க முன்னாள் எம்.பி கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தமிழில், நடிகர் கருணாஸ் கதாநாயகனாக நடித்த ‘அம்பாசமுத்திரம் அம்பானி’ திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தவர் நவ்நீத் ராணா. இவர் கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் மகாராஷ்டிரா மாநிலம், அமராவதி தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தார். அதன் பின்னர், தன்னை பா.ஜ.கவில் இணைத்து கொண்டார். அதனை தொடர்ந்து, கடந்தாண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க சார்பில் மீண்டும் அமராவதி தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.
இந்த நிலையில், சமீபத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், “சிலருக்கு பல மனைவிகள் மற்றும் பல குழந்தைகள் உள்ளனர். இதன் மூலம் அவர்களின் மக்கள் தொகை தொடர்ந்து வளர்ந்து வருகிறது. அதை முறியடிக்க இந்துஸ்தானைப் பாதுகாக்க குறைந்தது மூன்று முதல் நான்கு குழந்தைகளை பெற்றுக்கொள்ள வேண்டும். நான் அனைத்து இந்துக்களுக்கும் வேண்டுகோள் விடுக்கிறேன்.
அவர் மௌலானா அல்லது வேறு யாராரோ என்று எனக்குத் தெரியவில்லை, ஆனால் அவருக்கு 19 குழந்தைகள் மற்றும் நான்கு மனைவிகள் இருப்பதாகக் கூறினார், ஆனால் அவரால் 30 குழந்தைகள் கொண்ட குழுவை நிரப்ப முடியவில்லை. அதிக எண்ணிக்கையிலான குழந்தைகளைப் பெற்றெடுப்பதன் மூலம் அவர்கள் ஹிந்துஸ்தானை பாகிஸ்தானாக மாற்றத் திட்டமிடுகிறார்கள், எனவே நாம் ஏன் ஒரு குழந்தையுடன் திருப்தி அடைய வேண்டும்? நாம் குறைந்தது மூன்று முதல் நான்கு குழந்தைகளையும் பெற்றெடுக்க வேண்டும்” என்று கூறினார். இவரின் பேச்சு நாடு முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இவருக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/12/26/navneet-2025-12-26-08-02-31.jpg)