முஸ்லிம் பெண்ணுடன் ஓடிப்போகும் எந்தவொரு இந்து ஆணுக்கும் வேலை ஏற்பாடு செய்து தருவேன் என உத்தரப் பிரதேசத்தை முன்னாள் பா.ஜ.க எம்.எல்.ஏ பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

உத்தரப் பிரதேசம் மாநிலம் துமாரியாகஞ்ச் தொகுதியில் உள்ள தன்கர்பூர் கிராமத்தில், இரண்டு இந்து பெண்களை முஸ்லிம் ஆண்கள் திருமணம் செய்து கொள்ள கட்டாயப்படுத்தப்பட்டதாகவும், மதம் மாற்றப்பட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. அந்த குற்றச்சாட்டைத் தொடர்ந்து, முன்னாள் பா.ஜ.க எம்.எல்.ஏவான ராகவேந்திர பிரதாப் சிங் அந்த கிராமத்திற்குச் சென்று உரையாற்றினார். அப்போது அவர் கூறுகையில், “இரண்டு இந்து பெண்களுக்கு ஈடாக 10 முஸ்லிம் பெண்களைக்கூட ஏற்றுக்கொள்ள மாட்டேன். ஒரு முஸ்லிம் பெண்ணுடன் ஓடிப்போகும் எந்த இந்து ஆணுக்கும் நான் திருமண ஏற்பாடு செய்வேன், அவர்களுக்கு வேலைவாய்ப்பையும் ஏற்பாடு செய்வேன்.

Advertisment

இது அகிலேஷ் யாதவின் நேரம் அல்ல. பயப்படத் தேவையில்லை. நாங்கள் உங்களுடன் இருக்கிறோம். முஸ்லிம் ஆண்கள், இரண்டு இந்துப் பெண்களை மணக்கும் பிரச்சினை அப்படியே முடிந்துவிடாது. இரண்டு பேருக்குப் பதிலாக, இந்து இளைஞர்கள் குறைந்தது 10 முஸ்லிம் பெண்களையாவது அழைத்து வந்து திருமணம் செய்து வைக்க வேண்டும். மாநிலத்தில் இந்துக்கள் என்ன வேண்டுமானாலும் பயமின்றி செய்யலாம். மீதியை நான் பார்த்துக் கொள்கிறேன்” என்று பேசினார். இவருடைய பேச்சு சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், எதிர்க்கட்சிகள் பலரும் இவருக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றன.