நடிகர் ரஜினிகாந்தை இரண்டு நாட்களுக்கு முன்புசந்தித்துள்ளார் தமிழக பாஜகவின் மாஜி தலைவர். இந்த சந்திப்பில் ஏகத்துக்கும் புலம்பித் தள்ளியிருக்கிறார் மாஜி

Advertisment

தமிழக பாஜகவின் தலைவராக நயினார் நாகேந்திரன் நியமிக்கப்பட்டதிலிருந்தே அந்த மாஜி தலைவரை ஓரங்கட்டி வருகிறது பாஜகவின் தேசியத் தலைமை. அதிமுக-பாஜக கூட்டணிக்குள் சிக்கலை ஏற்படுத்தி வருவது மாஜி தலைவர் தான் என்பதை அறிந்து பல முறை அவர் தலைமையால் எச்சரிக்கையும் செய்யப்பட்டார். முழுமையாக அவரை ஓரங்கட்டவும் டெல்லி முடிவு செய்திருப்பதாகவும் அவருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இந்த நிலையில், நடிகர் ரஜினியை சந்தித்து கதறியுள்ளார் மாஜி. தேசிய தலைமைக்கு தகவல் தெரிவிக்க வேண்டுமெனில் பி.எல்.சந்தோசிடம் சொல்வதை வழக்கமாக வைத்திருந்தார் மாஜி. அதேசமயம், பிரதமர் மோடியின் கவனத்துக்கு தன்னுடைய மனக்குறையை தெரியப்படுத்த வேண்டுமானால், நடிகர் ரஜினி மூலமாகத்தான் சொல்ல வைப்பார் மாஜி தலைவர்.

அந்த வகையில் இரண்டு நாட்களுக்கு முன்பு ரஜினியை சந்தித்த மாஜி தலைவர், "அண்ணே,ரொம்பவும் மனசு ஒடைஞ்சிப் போயிருக்கேன். எனக்கு எந்த மாரியாதையும் கட்சியில் கிடைக்கலை. கொடுக்கவும் மாட்டேங்கிறாங்க. எனக்கு எதிரா நயினார் நாகேந்திரன் சதி செய்றார். என்னால் முடியலைண்ணே, கட்சியிலிருந்தே விலகிடலாம்னு இருக்கேன். இதை எப்படியாச்சும் பிரதமருக்குத் தெரியப்படுத்துங்க அண்ணே " என்று கெஞ்சியிருக்கிறார். அதனை அமைதியாக கேட்டுக்கொண்ட ரஜினி, "ஆகட்டும் பார்க்கலாம்" என்று மட்டும் சொல்லி மாஜியை அனுப்பி வைத்துள்ளார்.இந்த சீக்ரெட் விசயங்கள் தமிழக பாஜகவின் மேல் மட்டத்தில் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது.