Advertisment

வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு 6 மாத சிறைத் தண்டனை!

sheikhasina

Former Bangladesh Prime Minister Sheikh Hasina sentenced to 6 months in prison

வங்காளதேசத்தில் 1971ஆம் ஆண்டில் நடந்த விடுதலை போராட்டத்தில் பங்கேற்றவர்களின் வாரிசுகளுக்கு அரசுப் பணிகளில் 30 சதவீத ஒதுக்கீடு வழங்க ஷேக் ஹசீனா தலைமையிலான வங்கதேச அரசு கடந்தாண்டு முடிவு செய்தது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் போராட்டம் வெடித்தது.  அரசுக்கு எதிரான இந்த போராட்டத்தால், பிரதமராக இருந்த ஷேக் ஹசீனாவின் ஆட்சி கவிழ்க்கப்பட்டு, நாட்டை விட்டே வெளியேறி இந்தியாவில் தஞ்சமடைந்தார். அதே சமயம் வங்கதேசத்தில் ஏற்பட்ட வன்முறையில் அவரது அதரவாளர்கள் பலரும் கொல்லப்பட்டனர்.

Advertisment

இதனைத் தொடர்ந்து, நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணர் முகமது யூனுஸ் , வங்கதேச நாட்டின் இடைக்கால அரசின் தலைமை ஆலோசகராகப் பொறுப்பேற்றார். இதனைத் தொடர்ந்து, இந்தியாவில் தஞ்சம் புகுந்த ஷேக் ஹசீனாவுற்கு வங்கதேச குற்றவியல் நீதிமன்றம் பிவாரண்ட் பிறப்பித்து கடந்த ஆண்டு நவம்பர் 18ஆம் தேதி ஹசீனாவை ஆஜர்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டது. இதற்கிடையே அவரை வங்கதேசத்திற்கு திருப்பி அனுப்பக்கூடாது எனத் தொடர்ந்து இந்திய அரசுக்குக் கோரிக்கை விடுத்தும் வருகின்றனர்.

Advertisment

இதனையடுத்து, ஷேக் ஹசீனாவுக்கு எதிராக நீதிமன்றம் மீண்டும் கைது உத்தரவிடப்பட்டது. இடஒதுக்கீடு வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வங்கதேசத்தில் போராட்டம் நடந்த போது ஏராளாமானோர் மர்மமான முறையில் காணாமல் போனதாக ஷேக் ஹசீனாவுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில், ஷேக் ஹசீனா வரும் பிப்ரவரி 12ஆம் தேதிக்குள் கைது செய்ய வேண்டும் என வங்கதேச நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்தது. ஆனால், அவர் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இந்தியாவில் இருந்து வருகிறார் என்று கூறப்படுகிறது.

இதற்கிடையில், கடந்தாண்டு நடைபெற்ற போராட்டத்தின் போது மனிதகுலத்திற்கு எதிராக நடந்ததாக ஷேக் ஹசீனா மீது அந்நாட்டு சரவ்தேச குற்றவியல் தீர்ப்பாயத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு, நீதிபதி எம்.டி கோலம் மோர்டுசா உள்ளிட்ட மூன்று பேர் கொண்ட அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, ஹசீனா தனது அரசாங்கத்திற்கு எதிராக நடத்தப்பட்ட போராட்டங்கள் மீது திட்டமிட்ட தாக்குதல் நடத்தியதாக தலைமை வழக்கறிஞர் முகமது தாஜுல் இஸ்லாம் குற்றம் சாட்டினார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், வங்காளதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு 6 மாத சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

பதவி நீக்கம் செய்யப்பட்டு நாட்டை விட்டு தப்பிச் சென்ற பிறகு எந்தவொரு வழக்கிலும் தண்டனை பெறாத ஷேக் ஹசீனாவுக்கு, முதல் முறையாக இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

Prison sentenced SHEIKH HASINA Bangladesh
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe