அதிமுகவின் அண்ணா தொழிற் சங்க பேரவையின் முன்னாள் மாநில செயளாலரும், முன்னாள் எம்.எல்.ஏ.மான கோவை சின்னசாமி, திமுகவில் இணைகிறார்.
ஐ. என். டி. யு. சி.யில் இருந்த சின்னச்சாமி, ஜெயலலிதாவின் தலைமையேற்று அதிமுகவில் இணைந்தார். 2006 மற்றும் 2011-ல் சிங்காநல்லுர் அதிமுக எம். எல். ஏ. வாக தேர்வு செய்யப்பட்டார்.
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு டி.டி.வி. தினகரனுடன் சேர்ந்தார். பிறகு அங்கிருந்து பா.ஜ.க.வுக்கு தாவிய சின்னச்சாமி, எடப்பாடி தலைமையேற்று மீண்டும் அதிமுகவுக்கு திரும்பினார். அவருக்கு எந்த பதவியும் கொடுக்கப்படாமல் இருந்து வந்த நிலையில், தற்போது திமுகவில் இணைய முடிவு செய்துள்ளார். இதற்கான பேச்சு வார்த்தையை திமுக பேசி முடித்துள்ளது. இன்று அல்லது நாளை திமுகவில் சின்னச்சாமி இணைகிறார்.