முன்னாள் முதல்வரும், அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழுவின் தலைவருமான ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர் சுப்புரத்தினம் என்பவர், இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.

Advertisment

அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ சுப்புரத்தினம், கடந்த 1991-1996 காலகட்டத்தில் பழனி சட்டமன்றத் தொகுதியின் எம்.எல்.ஏவாக பதவி வகித்து வந்துள்ளார். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு ஓபிஎஸ் - ஈபிஎஸ் என இரண்டு அணிகளாக அதிமுக பிளவுப்பட்ட போது ஓ.பன்னீர்செல்வம் பக்கம் சுப்புரத்தினம் சென்றார்.

Advertisment

இவர் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளராக செயல்பட்டு வந்த நிலையில், இன்று (08-01-25) சென்னை அண்ணா அறிவாலயத்துக்கு வந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். அதே போல் சிவகாசி சட்டமன்றத் தொகுதியின் அதிமுக எம்.எல்.ஏவாக இருந்த பாலகங்காதரன் என்பவரும் அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்தார்.

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழ்நிலையில் இரண்டு அதிமுக முன்னாள் எம்.எல்.ஏக்கள் திமுகவில் இணைந்திருப்பது அரசியல் வட்டாரத்தில் விவாதத்தை கிளப்பியுள்ளது. 

Advertisment