ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முன்னாள் அதிமுக அமைச்சர்களான கே.சி கருப்பண்ணன் மற்றும் கே.வி ராமலிங்கம் ஆகியோர் வாக்காளர் பட்டியல் சீர்திருத்தத்தை ஆதரித்து மேட்டுப்பாளையம் எம்.எல்.ஏ மற்றும் அதிமுக ஈரோடு புறநகர் மேற்கு தொகுதி பொறுப்பாளர் ஏ.கே செல்வராஜ், பவானிசாகர் எம்.எல்.ஏ பண்ணாரி உடன் இன்று மனு அளித்தனர்.
அதனை தொடர்ந்து, இரு முன்னாள் அமைச்சர்களும் செய்தியாளர்களிடம் கூறியதாவது, “வாக்காளர் பட்டியல் திருத்தம் மிகச் சிறப்பானது. வீடு வீடாகச் சென்று வாக்குச்சாவடி நிலை அதிகாரிகள் வாக்காளர் பட்டியல் பெயர் சேர்க்க படிவங்களை முறையாக வழங்கி வருகின்றனர். இதை பாராட்டுகிறோம். எங்களது கட்சியின் பொதுச்செயலாளர் உத்தரவின்படி அனைத்து மாவட்டங்களிலும் பணி சிறப்பாக நடைபெற நாங்கள் இன்று கலெக்டரிடம் மனு அளிக்கிறோம். வாக்குச்சாவடி நிலைய அதிகாரிகள் செல்லும்போது உடன் சென்று உரிய உதவிகளை செய்ய எங்கள் கட்சி நினைத்துள்ளது.
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க படிவங்கள் தரும் போது அதை பூர்த்தி செய்து அதற்கான ஆவணங்களை பெறுவது போன்றவகளுக்கு எங்கள் பூத் லெவல் முகவர்களும் உதவி செய்கிறோம். வாக்காளர்கள் இடம் மாறி இருந்தால் அவர்கள் அதற்கான ஆவணங்களை தந்தால் வாக்காளர் பட்டியலில் சேர்க்க வழி உள்ளது. திமுக வாக்காளர் பட்டியல் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறது. ஏனென்றால் அவர்கள் கள்ள ஓட்டு போட முடியாமல் போகும். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் மட்டும் சுமார் 45 ஆயிரம் கள்ள ஓட்டுக்களை சேர்த்தனர். இவ்வாறு கள்ள ஓட்டு போடும் முயற்சி இனி நடைபெறாது என்பதால் இந்த வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்தை எதிர்க்கின்றனர்” என்று கூறினர்.
இதையடுத்து, முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் அதிமுகவில் எடப்பாடி பழனிச்சாமியின் உறவினர்கள் ஆதிக்கம் செலுத்துவதாக சொன்ன குற்றச்சாட்டு குறித்த கேள்விக்கு பதில் அளிக்கையில், “அவ்வாறு இல்லை” என்று அவர்கள் கூறினர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/11/06/admkex-2025-11-06-21-49-44.jpg)