கடந்த அக்டோபர் 30ஆம் தேதிமுத்துராமலிங்க தேவரின் 63வது குருபூஜை பசும்பொன்னில் நடந்த நிகழ்ச்சியில், முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் ஆகிய மூவரும் பங்கேற்று கூட்டாக முத்துராமலிங்க தேவருக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

Advertisment

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன் ஆகியோருடன் சேர்ந்து முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் முத்துராமலிங்க தேவருக்கு கூட்டாக  மரியாதை செலுத்தியது மட்டுமல்லாமல் செய்தியாளர்களைச் சந்தித்து பேசியது அதிமுகவில் சலசலப்பை உண்டாக்கியது. இதனால், கட்சிக்கு அவப்பெயர் உண்டாக்குவதாகக் கூறி அதிமுக அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்து செங்கோட்டையனை கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி நீக்கி உத்தரவிட்டார். அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டதை தொடர்ந்து செங்கோட்டையன், எடப்பாடி பழனிசாமி குறித்து தொடர்ந்து விமர்சனம் செய்து வருகிறார். அதே போல், செங்கோட்டையன் திமுகவின் பி-டீம் என்று எடப்பாடி பழனிசாமியும் குற்றச்சாட்டை முன்வைத்து வருகிறார்.

Advertisment

இந்த சூழலில், முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் விஜய்யின் தவெகவில் இணைய உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. செங்கோட்டையனை, த.வெ.க நிர்வாகி ஆதவ் அர்ஜுனா மற்றும் அக்கட்சியின் வியூக வகுப்பாளர் ஜான் ஆரோக்கியசாமி ஆகியோர் சந்தித்துப் பேசியதாகவும், செங்கோட்டையன் நாளை மறுநாள் (27.11.2025) த.வெ.க. வில் இணைய உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ முடிவை செங்கோட்டையன் விரைவில் வெளிப்படையாக அறிவிப்பார் என்றும் கூறப்படுகிறது..

இந்த நிலையில், கோவை விமான நிலையத்தில் இன்று (25-11-25) செங்கோட்டையன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “அரசியல் வரலாற்றில் ஏற்றத்தாழ்வுகளை சந்தித்து இந்த இயக்கத்திற்காக உழைத்த எனக்கு கொடுக்கப்பட்டிருக்கிற பரிசு உறுப்பினராக கூட இருக்கக் கூடாது என்ற முறையில் உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கியிருக்கிறார்கள். இந்த மனவேதனையை உங்களை போன்றவர்களுக்கு நன்றாக தெரியும். அதற்கு மேல் எந்த கருத்தும் சொல்வதற்கு இல்லை” என்று கூறினார். 

Advertisment