Advertisment

“ஜெயலலிதா தான் ரோல் மாடல்” - அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் எம்.பி. பேட்டி!

sathyabama-admk-ex-1

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட  முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனின் ஆதரவாளர்கள் 14 பேர் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டனர். ஏற்கனவே கட்சியில் இருந்து பதவிகள் பறிக்கப்பட்ட நிலையில் தற்போது கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளனர். அதன்படி அதிமுக முன்னாள் எம்பி சத்யபாமா, ஒன்றிய செயலாளர்களாக பதவி வகித்து வந்த இருந்த தம்பி (எ) சுப்பிரமணியம், குறிஞ்சிநாதன், ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட பொருளாளராக இருந்த கந்தவேல் முருகன், முன்னாள் யூனியன் தலைவர்களான மௌலீஸ்வரன், முத்துசாமி மற்றும் அத்தாணி அதிமுக பேரூர் செயலாளராக இருந்த ரமேஷ் என 14 பேர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர். 

Advertisment

இந்நிலையில் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் எம்.பி. சத்யபாமா ஈரோடு  மாவட்டம் கோபிச்செட்டிபாளையத்தில் இன்று (07.11.2025) செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “இந்த (அதிமுக) கட்சி நல்லா இருக்க வேண்டும் திமுகவை வீழ்த்த வேண்டும் என்ற ஜெயலலிதாவின் எண்ணத்தை நிறைவேற்ற வேண்டும். ஜெயலலிதா இந்த கட்சி நன்றாக இருக்க வேண்டும் என்று எவ்வளவோ தியாகங்கள் செய்துள்ளார். ஜெயலலிதா பெண்ணாக இருந்து, ஒரு கட்டத்தில் திமுகவை எதிர்த்து எவ்வளவு கஷ்டங்களை எல்லாம் சந்தித்துள்ளார்.  

Advertisment

அவர் (ஜெயலலிதா) தான் எங்களுக்கு ரோல் மாடல். அப்படிப்பட்ட ஜெயலலிதா ஒரு கட்டத்தில் தன்னுடைய நகைகளை எல்லாம் விற்று இந்த கட்சிக்காக ஜெயலலிதா செலவு செய்தார். அது வரலாறு. ஆனால் இன்றைக்கு இந்த கட்சி நன்றாக இருக்க வேண்டும் என்கிற ஒரே எண்ணத்துக்காக நாங்கள் எல்லாம் இந்த குரல் கொடுத்ததினால், அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கி இருக்கிறார்கள். இது எந்த விதத்தில்  நியாயம்?. அங்கே இருக்கக்கூடியவர்கள் கூட எங்களிடம் பேசிக் கொண்டு தான் இருக்கிறார்கள். 

அதாவது நீங்கள் செய்கிறீர்கள். நாங்கள் வெளியில் சொல்ல முடியவில்லை. ஏனென்றால் எங்களை அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கி விடுவார்கள் என்ற பயத்தில் இருக்கிறார்கள். அவர்களுக்கும் தெரியும். எல்லோரும் ஒன்று சேர்ந்தால் மட்டும் தான் நாம் ஜெயிக்க முடியும் என்பது அவர்களுக்கும் தெரியும். இருந்தாலும் கட்சி நல்லா இருக்க வேண்டும் என்கிற ஒரு நோக்கத்தில் நாங்கள் முன்னெடுத்திருக்கிறோம். கட்டாயம் நல்லது நடக்க வேண்டும் என்று தான் எங்கள் எண்ணமே தவிர வேறு எந்த ஒரு எண்ணமும் கிடையாது என்பதை நான் தெரிவித்துக்கொள்கிறேன்” எனப் பேசினார். 

ADMK FORMER MP edappadi k palaniswami Jayalalithaa K. A. Sengottaiyan sathyabama
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe