Advertisment

ஓ.பி.எஸ். மீது அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் கடும் விமர்சனம்!

ops-mks-cv-shanmugam

சென்னையில் உள்ள திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க. ஸ்டாலினைச் சந்தித்து, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று (27.02.2026) தன்னை திமுகவில் இணைத்துக் கொண்டார். மேலும், அதிமுக முன்னாள் எம்.பி.யும், ஓ.பன்னீர்செல்வத்தின் மகனுமான ஓ.பி. ரவிந்தரநாத், ஓ.பன்னீர்செல்வத்தின் அவரது ஆதரவு எம்.எல்.ஏ. ஐயப்பனும் திமுகவில் இணைத்துக் கொண்டனர். 

Advertisment

அதனைத் தொடர்ந்து தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் சட்டமன்றத் தொகுதியின் சட்டமன்ற  உறுப்பினர் பதவியை ஓ.பன்னீர்செல்வம் ராஜினாமா செய்தார். சென்னை தலைமைச் செயலகத்தில் பேரவை செயலாளர் சீனிவாசனைச் சந்தித்து ஓ. பன்னீர்செல்வம் ராஜினாமா கடிதத்தை அளித்தார். அதே போன்று மதுரை மாவட்டம் உசிலம்பட்டி சட்டமன்றத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் பதவியை ஓ. பன்னீர்செல்வம் ஆதரவாளரான ஐயப்பனும் ராஜினாமா செய்தார்.

Advertisment

இந்நிலையில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “பச்சோந்தி நிறம் மாறுவது போல அவ்வப்போது நிறம் மாறிக் கொண்டிருந்த ஒருவர் ஆவார். இவர் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துக்குப் பிடித்த சனி. இவர் தானாகச் செயல் செயல்படவில்லை. ஒருவர் தூண்டுதல் பின்னணியிலே மிகப்பெரிய சதிவலை பின்னப்பட்டு அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் ஜெயலலிதா இல்லை. இந்த கட்சிக்குத் தலைவர் இல்லை. இந்த கட்சியை அழித்து விடலாம். இந்த சின்னத்தை முடக்கி விடலாம் என எண்ணினர். பிரதான எதிர்க்கட்சியாக இருந்த திராவிட முன்னேற்றக் கழகமாகிய நம்மால் முடியாது. அது அவர் தந்தை காலத்திலேயே பார்த்துவிட்டார்கள். 

ops-mks-dmk-join-1

அதிமுகவை நம்மால் அழிக்க முடியாது. அந்த சக்தி நமக்கு இல்லை என்பதைத் தெளிவாகப் புரிந்து கொண்டு உள்ளிருந்தே கொல்லும் வியாதியாக எதிரியை விடப் பக்கத்தில் இருக்கிற துரோகிதான் மிகப்பெரிய மிக மிக ஆபத்தானவர். எதிரியால் சாதிக்க  முடியாததை ஒரு நண்பன் கூடவே இருந்த நண்பன், இடத்திலேயும் பங்கெடுத்துக் கொண்ட ஒருவன் துரோகியாக மாறினால் அவன் ஆயிரம் எதிரிக்குச் சமம். அண்ணா திராவிட முன்னேற்றக்கத்தை ஒழிக்க வேண்டும் என்றால் அதிமுகவில் இருந்தே ஒருவரை நாம் கைக்கூலியாக உருவாக்க வேண்டும். அந்த கைக்கூலியை வைத்து அதிமுகவைப் பிளவுபடுத்தி சின்னத்தை முடுக்கி இந்த கட்சியை அழித்து விடலாம் என்று தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு நபர்தான் இன்றைக்கு திமுகவிலே தன்னை இணைத்துக் கொண்டிருக்கின்றார்” எனத் தெரிவித்தார்.

dmk admk CV Shanmugam mk stalin O Panneerselvam
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe