Forest Department personnel chased Leopard roaming in residential area
வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அடுத்த மேல்பட்டி கிராமத்தில் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த குடியிருப்புகள் ஒட்டி வனப்பகுதி உள்ளது. இந்த வனப் பகுதியில் நேற்று மாலை குரங்குகள் அலறல் சத்தம் கேட்டுள்ளது. இதனை கேட்ட குடியிருப்பு பகுதிகளில் வசிக்கக் கூடிய பொதுமக்கள், வனப்பகுதியில் பார்த்த போது அங்கு மூன்று சிறுத்தைகள் நடமாடிக் கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இது குறித்து பேர்ணாம்பட்டு வனத்துறையினருக்கு அந்த பகுதி மக்கள் தகவல் தெரிவித்தனர். தகவலின் பெயரில் விரைந்து வந்த பேரணாம்பட்டு வனத்துறையினர், வனப்பகுதியில் பட்டாசுகள் மற்றும் பானம் விட்டு சிறுத்தையை காட்டுக்குள் விரட்டி அடித்தனர். இந்தப் பகுதியில் உள்ள குடியிருப்புவாசிகள் மிகவும் அச்சமடைந்து, சிறுத்தையை குடியிருப்பு பகுதிக்கு வராமல் வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட வேண்டும் என அந்த பகுதி மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.
Follow Us