Advertisment

வரலாற்றில் முதன்முறையாக நீதிமன்றத்தில் வாதாடிய முதல்வர்

852

For the first time in history, a Chief Minister argued in court Photograph: (court)

தேர்தல் ஆணையம் கொண்டுவந்துள்ள சிறப்புத் தீவிர வாக்காளர் வரைவு பட்டியல் (எஸ் ஐ ஆர்) நாடு முழுவதும் வாக்காளர் பட்டியலில் பல குளறுபடிகளை ஏற்படுத்தியுள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. அந்த வகையில், மேற்கு வாங்க முதல்வர் மம்தா பானர்ஜியும் எஸ்.ஐ.ஆர் -ஐ கடுமையாக எதிர்த்து வந்தார். இந்த நிலையில், விரைவில் மேற்கு வங்கத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் வரவுள்ள நிலையில் அங்கு எஸ்.ஐ.ஆர் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. இதில், பல்வேறு குளறுபடிகள் இருப்பதாகவும், இதை முறைப்படுத்தக் கோரியும் மம்தா பானர்ஜி உச்சநீதிமன்றத்தை நாடினார்.

Advertisment

இந்நிலையில், எஸ்ஐஆர் க்கு எதிராக மேற்கு வாங்க அரசு தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை நடைபெற்றது. இந்த விசாரணையில் மம்தா பானர்ஜி  தானே நேரடியாக நீதிமன்றத்தில் ஆஜராகி தங்கள் தரப்பு வாதங்களை முன்வைத்தார். அதன்படி,  "தேர்தல் ஆணையத்தில் எங்களுக்கு நீதி மறுக்கப்பட்டுள்ளது. நாங்கள் 6 முறை தேர்தல் ஆணையத்திற்குக் கடிதம் எழுதியும், இருப்பினும், தேர்தல் ஆணையத்திடம் இருந்து எங்களுக்கு எந்தவித பதிலும் கிடைக்கவில்லை. விதிமுறைக்கு அப்பாற்பட்டுத் தேர்தல் ஆணையம் செயல்பட்டு வருகிறது.எஸ்ஐஆர் என்பது நீக்கத்திற்கான நடைமுறையாக மட்டுமே இருந்து வருகிறதே தவிர, அதில் பெயர்கள் சேர்க்கப்படுவதில்லை.

Advertisment

குறிப்பாக, திருமணமாகி கணவர் வீட்டிற்குச் சென்ற பெண்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலிலிருந்து தேர்தல் ஆணையம் நீக்கியுள்ளது. காரணம் கேட்டால், அவர்கள் ஏன் கணவர் பெயரை பயன்படுத்தினார்கள் அல்லது ஏன் பெற்றோர்களின் பெயரைப் பயன்படுத்தினர் போன்ற தேவையற்ற கேள்விகளை அதிகாரிகள் எழுப்புகின்றனர். மேலும், பணி நிமித்தம் காரணமாகப் புலம்பெயர்ந்த மக்களின் பெயர்களும் நீக்கப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையம் தொடர்ந்து விதிகளை மீறி வருகிறது. அதுமட்டுமல்லாமல், தேர்தல் ஆணையத்தில் தொடர் தொல்லைகள் மற்றும் அழுத்தத்தின் காரணமாக இதுவரை பல பிஎல்ஓக்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். அதுபோக, 8000 மைக்ரோ பார்வையாளர்களைத் தேர்தல் ஆணையம்  மேற்கு வங்க மாநிலத்திற்கு மட்டும் நியமித்துள்ளது. எனவே, வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட 1.30 லட்சம் வாக்காளர்களின் பெயர்களைத் தேர்தல் ஆணையம் நீக்கியதை ரத்து செய்ய வேண்டும்" எனத் தெரிவித்தார்.  

விசாரணையில், இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், இந்த வழக்கில் இரண்டு நாட்களில் பதிலளிக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டுள்ளனர். மேலும், இந்த எஸ்ஐஆர் பணிகளில் ஏற்பட்டுள்ள சிறிய சிறிய தவறுகளைக் கூட தேர்தல் ஆணையம் கவனிப்பதில்லையா? என்ற கேள்விகளை  முன் வைத்து, நீதிபதிகள் தேர்தல் ஆணையத்திற்கு கடுமையான கண்டனங்களைத் தெரிவித்துள்ளனர். இந்த வழக்கு வருகின்ற 9ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

election commision of india SIR court west bengal mamata banarjee
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe