'footprints will be left in the ground...' - Mansoor Ali Khan criticizes Vijay Photograph: (actor)
'விஜய் மாதிரி வானத்திலேயே சுத்திக்கிட்டு எல்லாம் இருக்க முடியாது' என நடிகர் மன்சூர் அலிகான் விஜய்யை விமர்சித்துள்ளார்.
இன்று சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த நடிகர் மன்சூர் அலிகான் பேசுகையில், ''என்னோட போராட்டம், என்னோட பிரச்சாரம் எல்லாவற்றிலும் என் கால் தடம் மண்ணில் பதியும். விஜய் மாதிரி வானத்திலேயே சுத்திக்கிட்டு எல்லாம் இருக்க முடியாது. அந்த தம்பியை ஆதரிச்சு பார்த்தேன். ஆனால் அவரு வானத்திலே சுற்றிக்கொண்டிருக்கிறார். இங்க பாரு இந்த கால் தடம் கீழே பதியணும். தெருவில், தொண்டர்களுடன் அடிமட்ட இடத்தில், மார்க்கெட்டில், வயலில் போய் சந்திக்கணும் மக்களை. வானத்திலேயே உலாத்திக்கிட்டு வான தூதர்களா இருந்துகிட்டு இருக்கக்கூடாது. ஹெலிகாப்டர்ல போய் இறங்கி ஹெலிகாப்டர்ல வருகிறவன் பணக்காரனுக்கு தான் சொம்படிப்பான். பணக்காரனுக்கு தான் பல்லக்கு தூக்குவான். புரியுதுங்களா?
அறிஞர் அண்ணா எப்படி கஷ்டப்பட்டாங்க தெரியுமா? இந்த மாதிரி லாட்ஜ் கூட இல்லை தங்குதற்கு. இரவு பத்தரை மணிக்கு மேடையில அவங்களோட உரையை முடிச்சிட்டு டூரிங் டாக்கீஸ்ல போய் சாதாரணமா மக்களோடு மக்களாக டூரிங் டாக்கீஸ் பெஞ்ச்ல படுத்துட்டு காலையில எழுந்து குளிச்சிட்டு அடுத்த இடத்திற்கு கிளம்பிடுறாங்க. அப்படி வாழ்ந்தவங்க. இன்னைக்கு தலைவர்னு வரவனெல்லாம் அப்படியா இருக்கான். ஸ்பெஷல் பிளைட், ஜார்டட் பிளைட்ல வருபவர்கள் எல்லாம் சும்மா கற்பனை கதை. இதெல்லாம் ஒரு ஆணியும் புடுங்க முடியாது. இதுதான் விஷயம்'' என்றார்.
Follow Us