தமிழகத்தில் பல மாவட்டங்களில் கனமழை பொழிந்து வரும் நிலையில் தென்காசி மாவட்டம் குற்றாலம் பகுதியில் கனமழை பொழிந்து வருகிறது. இதன் காரணமாக குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
கடந்த மூன்று தினங்களாகவே தென்காசி மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டியப் பகுதிகளில் கனமழை பொழிந்து வருகிறது. இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் அதிகப்படியான சுற்றுலாப் பயணிகள் குற்றாலத்தில் குவிந்திருந்தனர். இந்நிலையில் குற்றாலம் மெயின் அருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக பாதுகாப்புக் கருதி குளித்துக் கொண்டிருந்த சுற்றுலாப் பயணிகள் போலீசார் அறிவுறுத்தலைத் தொடர்ந்து அங்கு இருந்து அப்புறப்படுத்தப்பட்டனர்.