வடகிழக்கு பருவமழை தொடங்கியிருக்கும் சூழலில் தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. இதனால், தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் நேற்று காலை முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

Advertisment

இந்த நிலையில் நாட்டிலேயே முதல் முறையாக ஆற்று நீர் மட்டம் மற்றும் வெள்ளம் ஏற்படுவதற்கு முன்பே அதைக் கணிக்க உதவும் வகையில் தொழில்நுட்பத்தால் இயக்கப்படும் நிகழ்நேர வெள்ள முன்னறிவிப்பு அமைப்பு மற்றும் இடஞ்சார்ந்த ஆதரவு அமைப்பு (RTFF & SDSS) சென்னையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

Advertisment

ரூ.107.2 கோடி மதிப்பிலான இந்த திட்டத்தில் ஏரிகள், ஆறுகள், மழைநீர் வடிகால் அமைப்பு மற்றும் கடல் ஆகியவற்றின் நீர்மட்டத்தின் தகவலை துல்லியமாக கணிக்க முடியும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும், மழையால் சென்னையில் அதிகம் பாதிக்கக்கூடிய பகுதிகளான புளியந்தோப்பு, நுங்கம்பாக்கம், மாம்பலம், சைதாப்பேட்டை, வேளச்சேரி, முடிச்சூர் போன்ற பகுதிகளில் ஏற்படும் தெருமட்டத்திலான நீர் சூழ்வதை முன்னரே அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தில் சென்னை மட்டுமல்லாமல், திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் ராணிப்பேட்டை உட்பட 4,974 சதுர கி.மீ பரப்பளவைக் கண்காணிக்கிறது. இந்த திட்டம் ஐஐடி மெட்ராஸின் தொழில்நுட்ப மேற்பார்வையின் கீழ் மற்றும் உலக வங்கியின் ஆதரவுடன் செயல்படுகிறது.

Advertisment

இந்த அமைப்பின் கீழ், அடையாறு, கூவம், கொசஸ்தலையார், கோவளம் நதி துணைப் படுகைகள் கவனிக்கப்படுகின்றன. முன்னறிவிப்புகள் நேரடியாக பேரிடர் மேலாண்மை குழுக்களுக்குச் சென்று TN-Alert செயலி மூலம் பொதுமக்களுடன் பகிரப்படும். குறிப்பாக மழைக்காலங்களில் அனைவரையும் சிறப்பாகத் தயாராக வைத்திருக்க பல நகரத் துறைகளைச் சேர்ந்த குழுக்கள் ஒன்றிணைந்து செயல்படுகின்றன.