அழியாறுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை - 5 மாவட்டங்களுக்கு அலர்ட்

புதுப்பிக்கப்பட்டது
a4231

dam Photograph: (rain)

கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்திருக்கும் நிலையில் அங்கு பல்வேறு மாவட்டங்களில் கனமழை பொழிந்து வருகிறது. அதேபோல் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய தமிழக மாவட்டங்களிலும் மழை பொழிந்து வருகிறது. இன்று 5 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

அறிவிப்பின்படி கன்னியாகுமரி, கோவை, நெல்லை, தென்காசி, தேனி ஆகிய 5 மாவட்டங்களில் காலை 10 மணி வரை இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. கர்நாடக அணையில் இருந்து நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதால் தமிழகத்தில் ஒகேனக்கல் காவிரி ஆற்றுக்கு வரும் நீரின் அளவு அதிகரித்துள்ளது. நீர்வரத்து தொடர்ந்து உயர்ந்து வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் விதிக்கப்பட்ட தடையானது நான்காவது நாளாக இன்றும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

கோவை பொள்ளாச்சி ஆழியாறு அணையின் கொள்ளளவு 110 அடியை எட்டியதால் முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அணையில் இருந்து எப்பொழுது வேண்டுமானாலும் நீர் திறக்கலாம் என்பதால் கரையோரத்தில் உள்ள மக்கள் பாதுகாப்பாகவும் எச்சரிக்கையாகவும் இருக்க வேண்டும் என அறிவுறுத்தல் கொடுக்கப்பட்டுள்ளது.

Rainfall Tamilnadu weather
இதையும் படியுங்கள்
Subscribe