Advertisment

கீழணையில் இருந்து கொள்ளிடத்தில் தண்ணீர் திறப்பு; வெள்ள அபாய எச்சரிக்கை!

103

கீழணையில் இருந்து கொள்ளிடத்தில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. தண்ணீரின் வரத்து அதிகமாக இருப்பதால் கொள்ளிடத்தில் விநாடிக்கு 57,761 கன அடி திறக்கப்பட்டுள்ளது. கீழணையில் இருந்து கொள்ளிடத்தில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. கடந்த 27-ம் தேதி மாலை மேட்டூர் அணை அதன் முழு கொள்ளளவான 120 அடியை எட்டியது. இதனால் அணைக்கு வரும் உபரி நீர் காவிரி ஆற்றில் 1,00,000 கன அடி திறந்துவிடப்பட்டுள்ளது.  பவானி ஆற்றிலிருந்து 10,000 கன அடியும், அமராவதி ஆற்றில் 15,000 கன அடியும் திறக்கப்பட்டு, காவிரி ஆற்றில் 1,25,000 கன அடிக்கு மேல் உபரி நீர் சென்று கொண்டிருக்கிறது. மேலும், இந்த தண்ணீரின் அளவு படிப்படியாக அதிகரிக்கக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

இதைத் தொடர்ந்து, மேலணை மற்றும் கல்லணையிலிருந்து திங்கட்கிழமை காலை 10 மணியளவில் சுமார் 40,000 கன அடி உபரி நீர் கொள்ளிடம் ஆற்றில் திறந்துவிடப்பட்டுள்ளது. மேலும், இது படிப்படியாக நீர்வரத்திற்கு ஏற்ப சுமார் 1,00,000 கன அடியாக உயர்த்தப்பட வாய்ப்புள்ளது என்று நீர்வளத்துறை தெரிவித்துள்ளது. இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை மதியம் கீழணையில் இருந்து விநாடிக்கு 3,000 கன அடி தண்ணீர் கொள்ளிடத்தில் திறந்துவிடப்பட்டது. தற்போது கொள்ளிடத்தில் விநாடிக்கு 58,784 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் கீழணையில் இருந்து கொள்ளிடத்தில் திறக்கப்பட்ட தண்ணீரின் அளவு அதிகப்படுத்தப்பட்டு, விநாடிக்கு 57,761 கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது.

மேலும், வடவாற்றில் விநாடிக்கு 374 கன அடியும், வடக்கு ராஜன் வாய்க்காலில் விநாடிக்கு 128 கன அடியும், தெற்கு ராஜன் வாய்க்காலில் விநாடிக்கு 418 கன அடியும், குமிக்கி மண்ணியாற்றில் விநாடிக்கு 93 கன அடி தண்ணீரும் திறந்துவிடப்பட்டுள்ளது.இதை, சிதம்பரம் நீர்வளத்துறை செயற்பொறியாளர் காந்தரூபன் தலைமையில், உதவி செயற்பொறியாளர்கள் சிதம்பரம் ரமேஷ், அணைக்கரை கொளஞ்சிநாதன் மற்றும் உதவி பொறியாளர்கள், நீர்வளத்துறை பணியாளர்கள் கொண்ட குழுவினர் கொள்ளிடக் கரைப் பகுதியில் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். மேலும், கொள்ளிடத்தில் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.a

Kollidam water
இதையும் படியுங்கள்
Subscribe