Advertisment

சென்னைக்கு வரும் விமானங்கள் ரத்து!

chennai-airport-run-way

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. அதே சமயம் வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள புயலுக்கு தாய்லாந்து நாடு பரிந்துரைத்த மோன்தா (Montha) என்று பெயரிடப்பட்டது. தென்கிழக்கு வங்கக் கடலில் நேற்று (27.10.2025) அதிகாலை 02:30 மணியளவில் மோன்தா புயல் உருவானது. இன்று காலைக்குள் தீவிர புயலாக வலுப்பெறும் எனத் தெரிவிக்கப்பட்டது. மேலும் இந்த புயல் இன்று (28.10.2025) மாலை அல்லது இரவு நேரத்தில் மச்சூலிப்பட்டினம் - கலிங்கப்பட்டினம் இடையேயான ஆந்திரப் பிரதேச கடற்கரை பகுதியில் கரையை கடக்க வாய்ப்புள்ளது எனத் தெரிவிக்கப்பட்டது. 

Advertisment

இதன் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து மிதமான மழை பொழிந்து வருகிறது. இந்நிலையில் மோன்தா புயல் எதிரொலியாக ஆந்திர மாநிலத்தில் இருந்து சென்னைக்கு வரும் 4 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அதாவது விசாகபட்டினத்தில் இருந்து காலை 09:45 மணிக்குச் சென்னை வரும் இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதே போன்று ராஜமுந்திரியில் இருந்து மதியம் 01:35 மணிக்குச் சென்னைக்கு வரும் இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் விஜயவாடா உள்ளிட்ட நகரங்களில் இருந்து சென்னை வர உள்ள சில விமானங்களும் ரத்து செய்ய வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

முன்னதாக மோன்தா புயல் காரணமாக ஏற்பட்டுள்ள கனமழை எச்சரிக்கையை அடுத்து சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு இன்று (28.10.2025) ஒரு நாள் மட்டும் விடுமுறை அறிவித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஆந்திராவை நோக்கி மோன்தா புயல் நகர்ந்து வரும் நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த விடுமுறை அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதோடு திருவள்ளூர் மாவட்டத்திற்கு மிகக் கனமழைக்கான எச்சரிக்கை ஏற்கனவே விடப்பட்து. அதே சமயம் சென்னையிலும் தொடர்ச்சியாக மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.

cyclone cancelled flight chennai airport heavy rain Cyclone Montha
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe