சென்னையில் இருந்து ஹைதராபாத் நோக்கி புறப்பட்டு செல்லும் ஸ்பைஸ்ஜெட் விமானத்தில் 2 ஆம் தேதி காலை இயந்திரக் கோளாறு ஏற்பட்டது. இதனால் ஓடுதளத்திலேயே விமானம் சுமார் 3 மணி நேரம் நிறுத்திவைக்கப்பட்டது. அதன் காரணமாக விமானத்திற்குள் இருந்த சுமார் 40க்கும் மேற்பட்ட பயணிகள் பல்வேறு உடல் உபாதைகளுக்கு ஆளானதாகக் கூறப்படுகிறது. பின்னர் கோளாறு சரிசெய்யப்பட்டதாக விமான நிலைய ஊழியர்கள் பயணிகளைச் சமாதானப்படுத்தி பயணத்தைத் தொடர்ந்தனர். ஆனால், ஓடுதளத்தில் இருந்து புறப்பட்ட விமானம் 10 ஆயிரம் அடி உயரத்தில் ஏறியபோது, விமானத்தின் சக்கரங்கள் உள்ளே செல்ல முடியாமல் மீண்டும் கோளாறு அடைந்தது.
இதனைத் தொடர்ந்து விமானத்தைத் தரையிறக்க அனுமதி கேட்டு விமான நிலையத்தைப் பைலட் தொடர்புகொண்ட போது, உடனடியாக அனுமதி கிடைக்கவில்லை. இதனால் பயணிகள் கூச்சல் குழப்பத்திற்கு ஆளாகினர். அப்போது விமானத்தில் இருந்த பலருக்கு சில மணி நேரம் கேட்கும் திறனை இழந்ததாகவும், சிலருக்கு மயக்கமும் வாந்தியும் ஏற்பட்டதாகவும் சக பயணிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, விமானத்தைத் தரையிறக்க அனுமதி வழங்கப்பட்டதைத் தொடர்ந்து, விமானம் பாதுகாப்பாகத் தரையிறக்கப்பட்டது. விமானம் தரையிறங்கியவுடன், அதில் பயணித்த பயணிகள் விமானத்தின் படிகட்டுகளிலேயே அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், ஸ்பைஸ் ஜெட் விமான நிலைய ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
தங்களுடைய பயணச் சீட்டுக்கான தொகையை முழுமையாகத் திருப்பிச் செலுத்த வேண்டும் என்று கேட்டதோடு, சுமார் 30 மணி நேரம் தாமதமாகியுள்ளதால் அதற்கான நஷ்டஈட்டை வழங்க வேண்டும் என்றும் பயணச் சீட்டுக்கான தொகையைத் திருப்பிச் செலுத்த 3 முதல் 7 நாட்கள் வரை ஆகும் என்பதால், பயணிகள் உடனடியாகத் கட்ட்ணத் தொகையை திருப்பிச் செலுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.
மேலும் அந்த விமானத்திம் கோளாறால் பல பயணிகள் மருத்துவ சிகிச்சை, தொழில், பணிக்கு சேர்வது உள்ளிட்ட பல்வேறு வேலைகளுக்கு சரியான நேரத்திற்கு செல்ல முடியாமல் தவித்தனர். இதற்கிடையில் விமான நிறுவனம் தங்களுடைய நிறுவனத்தை மூட உள்ளதாக அறிவிப்பை வெளியிட்டதால பயணிகள், கோளாறான விமானங்களை இயக்கி மக்களின் உயிரைக் காவுவாங்கப் பார்ப்பதாகவும், தங்களுக்கு ஏதாவது நேர்ந்திருந்தால் தங்களுடைய குடும்பத்திற்கு என்ன பதில் சொல்வது என்றும் மனக்குமுறலை வெளிப்படுத்தியுள்ளனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/11/03/untitled-1-2025-11-03-18-48-31.jpg)