சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆனி திருமஞ்சனம் மற்றும் ஆருத்ரா தேர் மற்றும் தரிசன விழா சிறப்பு வாய்ந்தது. இவ்விழா ஆண்டுக்கு இருமுறை நடைபெறும். தமிழக மட்டுமல்லாமல் வெளிமாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் சிவனடியார்கள் என திரளாக கலந்து கொள்வார்கள்.

Advertisment

இந்த நிலையில் இந்த ஆண்டிற்கான ஆருத்ரா தேர் திருவிழா ஜனவரி 2ஆம் தேதியும், தரிசன விழா ஜனவரி 3 ஆம் தேதியும் நடைபெறுகிறது. இதனையொட்டி இன்று (25-12-25) காலை 8 மணி அளவில் கொடியேற்றம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பக்தர்கள் மற்றும் சிவனடியார்கள் திரளாக கலந்து கொண்டனர். கொடி ஏற்ற தினம் அரசு விடுமுறை என்பதால் உள்ளூர் மக்கள் மட்டுமல்லாமல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் கோவிலுக்கு வருகை தந்தனர். இதனால் கொடியேற்றத்திற்கு வழக்கத்தை விட அதிகமான கூட்டம் காணப்பட்டது. 

Advertisment