Fisherman missing in the middle of the sea - search intensifies Photograph: (sea)
வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்திருக்கும் நிலையில் பல்வேறு மாநிலங்களில் கடற்கரை பகுதிகள் சீற்றமாகக் காணப்படுகிறது. இதனால் மீன் பிடிக்க மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தல் தொடர்ந்து கொடுக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கர்நாடகா மாநிலம் மங்களூரில் மீனவர் ஒருவர் மாயமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மங்களூரு மீன்பிடி தளத்தில் இருந்து சக மீனவர்களுடன் படகில் மீன் பிடிக்கச் சென்ற பிலிப் பார்தோலோமியா என்ற மீனவர் நடுக்கடலில் மாயமானதாக கூறப்படுகிறது. இவர் ராமநாதபுரத்தை சேர்ந்தவர் என்ற முதற்கட்ட தகவல் வெளியாகி இருக்கிறது. காணாமல்போன இவரை சக மீனவர்கள் தேடி வருகின்றனர். அதேபோல் மீன்வளத் துறைக்கும் தகவல் கொடுக்கப்பட்ட நிலையில் மங்களூரு மீன்வளத்துறையினர் கடற்படைக்கு தகவல் தெரிவித்து மாயமான மீனவரை தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
Follow Us