வேலூர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக அவ்வப்போது விட்டு விட்டுப் பெய்து வந்த கனமழையின் காரணமாக வேலூர் கன்சால் பேட்டை பகுதியில் வெள்ளம் சூழ்ந்ததால் இடுப்பளவு தண்ணீர் தேங்கியது. இதில் 50க்கும் மேற்பட்ட வீடுகளில் உள்ள பொதுமக்கள் வெளியேற முடியாமலும் அத்தியாவசியப் பொருட்களை வாங்க வெளியே செல்ல முடியாமல் தத்தளித்து வந்த நிலையில் தற்போது வேலூர் தீயணைப்புத் துறையினர் ரப்பர் படகு மூலமாக வீடுகளுக்குள் இருந்து வெளியே வர முடியாமல் தத்தளித்து வந்தவர்களை மீட்கப்பட்டனர்.

Advertisment

மழை நின்ற பிறகும் கன்சல்ட் பட்டு பகுதியில் இருந்து தண்ணீர் வெளியேறாததால் சம்பந்தப்பட்ட மாநகராட்சி நிர்வாகத்தினர் தண்ணீர் வெளியேற்ற விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கன்சால்பேட்டை பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

Advertisment