ஈரோட்டில் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில்  உள்ள பொதுகழிவறைக்கு செல்லும் வழியில்  செங்கற்களுக்கு அடியில் பாம்பு ஒன்று பதுங்கி படுத்திருந்ததை அங்கு வந்த பொதுமக்கள் பார்த்துள்ளனர். உடனே இதுகுறித்து  தீயணைப்பு துறையினருக்கு  தகவல் தெரிவிக்கப்பட்டது.

Advertisment

இதையடுத்து  தீயணைப்பு நிலைய அலுவலர் விஜயகுமாரும் மற்றும் ஒரு தீயணைப்பு வீரரும் அங்கு விரைந்து வந்து பாம்பைப் பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அப்போது பாம்பைப் பிடித்து சாக்குப் பையில் போட முயன்ற போது அந்த பாம்பு தீயணைப்பு  நிலைய அலுவலர் விஜயகுமாரின் கையை கடிக்க முயல, நல்லவேளையாக அவர் துரிதமாக செயல்பட்டு கையை சட்டென விலக்கிக் கொண்டதால் பாம்புக் கடியில் இருந்து தப்பினார்.

Advertisment

இதனைத் தொடர்ந்து, பாம்பை தீயணைப்புத் துறையினர் பிடித்துச் சென்றனர். இச்சம்பவத்தால் கலெக்டர் அலுவலக வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.