டெல்லியில் இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த விமான நிலையத்தை நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் இந்த விமான நிலையத்தில் உள்ள ஏர் இந்தியா விமான நிறுவனத்திற்குச் சொந்தமான பேருந்து ஒன்று விமான நிலையத்திற்குள் உள்ள 3வது முனையத்தில் இன்று (28.10.2025) திடீரென தீ பற்றி எறிந்தது. இதனால் அப்பகுதி முழுவதுமே கரும்புகை சூழ்ந்து காணப்பட்டது. 

Advertisment

இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு படையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். அதோடு பாதுகாப்பு கருதி அப்பகுதியில் இருந்து பயணிகளை விமான நிலைய அதிகாரிகள் அங்கிருந்து வெளியேற்றியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. நல்வாய்ப்பாக இந்த பேருந்தில் பயணிகள் யாரும் இல்லாததால் பெரும் அசம்பாவிதம் தடுக்கப்பட்டது. இந்த விபத்தில் யாருக்கும் காயம் மற்றும் உயிரிழப்பு ஏற்படவில்லை என விமான நிலைய இயக்குநரக அதிகாரிகள் அதிகாரப்பூர்வமாக விளக்கம் அளித்துள்ளனர். 

Advertisment

அதே சமயம் பேருந்தில் எப்படி தீ விபத்து ஏற்பட்டது, பேருந்தில் தீ பற்றியது எப்படி என்பது தொடர்பான முதற்கட்ட விசாரணை நடைபெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த தீ விபத்திற்கான காரணம் என்ன என்பது குறித்த விரிவான முழு விசாரணைக்குப் பின்னரே தெரிய வரும் எனக் கூறப்படுகிறது. விமான நிலையத்தின் ஓடுபாதை அருகே பேருந்து தீப்பிடித்து எறிந்த சம்பவம் அங்கிருந்த பயணிகள், விமான நிலைய ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.