திருச்சி மாவட்டம் திருவரங்கத்தில் இன்று ஏற்பட்ட தீ விபத்தில் 6 வீடுகள் எரிந்து சேதமானது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisment

திருச்சி ஸ்ரீரங்கம் பகுதியில் உள்ள நரியன் தெருவில் திடீரென ஏற்பட்ட தீவிபத்தில் ஆறு வீடுகள் எரிந்து முழுவதும் சாம்பலானது. இதில் பீரோ, கட்டில், டூவீலர் என பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதமானது. தகவலறிந்து அங்கு வந்த தீயணைப்புத் துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். முதற்கட்ட விசாரணையில் தீ விபத்திற்கு காரணம் கேஸ் சிலிண்டர் கசிவு எனக் கூறப்படுகிறது. இதுகுறித்து திருவரங்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.