கேளம்பாக்கம் பகுதியில் அடுக்குமாடிக் குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்து பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Advertisment

செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கம், ஓஎம்ஆர் சாலை பகுதியில் 14 அடுக்குகளைக் கொண்ட குடியிருப்பு உள்ளது. சுமார் 1000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் திடீரென அந்த குடியிருப்பின் எட்டாவது மாடியில் இருந்த மூன்றாவது வீட்டின் ஜன்னல் வழியே கரும்புகை வெளியேறியது. இதனைக் கண்டு அச்சமடைந்த அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் தீயணைப்புத் துறைகளுக்கு தகவல் கொடுத்தனர்.

Advertisment

சம்பவ இடத்திற்கு தீயணைப்புத் துறையினர் வருவதற்குள் வீட்டின் அனைத்து பகுதிகளிலும் தீ பரவி புகை வெளியேறும் அளவு அதிகரித்து. இதனால் அடுக்குமாடிக் குடியிருப்பில் இருந்த பொதுமக்கள் கீழே இறங்கி ஓடி வந்தனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு கேளம்பாக்கம் போலீசார் விரைந்தனர். தற்பொழுது அந்த இடத்திற்கு மூன்று தீயணைப்பு வாகனங்கள் வந்த நிலையில் தீயை அணைக்கும் பணியானது தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சற்று பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சிலிண்டர் வெடித்ததால்  ஏற்பட்ட தீ விபத்தா அல்லது மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதா என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.