ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி அருகே எல்லீஸ் பேட்டை நடுக்காளி பாளையத்தில், வைக்கோல் ஏற்றி வந்த லாரியில் தீப்பிடித்து எரிவதாக ஈரோடு தீமைப்புத் துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் கணிப்பு துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சேர்ந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

Advertisment

45 நிமிடங்கள் போராட்டத்துக்குப் பிறகு தீயணைத்தனர். ஆனாலும் தீ பரவியதால் வைக்கோல் மற்றும் லாரி முழுவதும் எரிந்து சாம்பலானது. மின் கம்பியில் வைக்கோல் உரசியதில் தீப்பிடித்து விசாரணையில் தெரிய வந்தது. லாரியில் தீப்பிடித்ததும் அதன் டிரைவர் குடியிருப்பு அல்லாத பகுதிக்கு கொண்டு சென்று லாரியை நிறுத்தி தப்பி சென்று விட்டார் .இதனால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. லாரி உரிமையாளர் சில மாதங்களுக்கு முன்புதான் இந்த லாரியை புதிதாக வாங்கியதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. தொடர்ந்து இந்த விபத்து தொடர்பாக போலீசார் விசாரணையில் இறங்கியுள்ளனர்.

Advertisment