Fire breaks out at rubber factory Photograph: (fire)
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் சிப்காட் தொழிற்சாலையில் உள்ள ரப்பர் தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
இன்று அதிகாலை 4 மணியளவில் சம்பந்தப்பட்ட ரப்பர் தொழிற்சாலையில் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக தகவல்கள் வெளியானது. அதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்புத் துறையினர் தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அண்மையில் திருவள்ளூரில் சரக்கு ரயிலில் வந்த டீசல் டேங்குகளில் கசிவு ஏற்பட்டு பெரும் தீ விபத்து ஏற்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.