Fire breaks out at a popular mall in Chennai; people run away screaming! Photograph: (fire accident)
சென்னை வடபழனியில் உள்ள பிரபல வணிக வளாகங்களில் ஒன்றான ஃபோரம் மாலில் ஏராளமான கடைகள், ஹோட்டல்கள் மற்றும் திரையரங்குகள் போன்றவை உள்ளன. இதன் காரனனமாக இங்கு தினமும் ஏராளமான மக்கள் வந்து செல்வது வழக்கம். இந்த நிலையில், நான்கு மாடிகளை இந்த வணிக வளாகத்தில் முதல் மடியில் உள்ள பிரபல ஹோட்டல் ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீயானது, கீழ் தளம் வரை பரவியது. இதனால் அந்த ஹோட்டல் பணிபுரிந்த ஊழியர்கள் மற்றும் பலர் அலறியடித்து ஓடினர்.
இதையடுத்து, வளாகத்தில் இருந்த அனைவரும் வெளியேற்றப்பட்டனர். தீ விபத்து பகுதியில் இருந்து அதிக அளவிலான கரும்புகை வெறியேறியதால் மக்கள் பீதியடைந்தனர். இருப்பினும், ஹோட்டல் ஊழியர்கள் தீயணைப்பான் கருவிகள் மூலமாக அந்த தீயை காட்டுக்குள் கொண்டுவந்தனர். பின்னர், தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து துரித நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
மின்கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின்றன. இருப்பினும், வடபழனி காவல்துறையினர் இது குறித்து வழக்கு பதிவு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தற்போது, வணிக வளாகத்தின் நுழைவு வாயில்கள் மூடப்பட்டுள்ளன. அதே நேரத்தில், பொதுமக்களுக்கு தற்காலிகமாக அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
Follow Us