அண்மையாகவே பேருந்து விபத்து என்பது அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் கடந்த 2025 வருடத்தின் கடைசியில் தென்காசி, விருத்தாச்சலம் உள்ளிட்ட பகுதிகளில் நடந்த பல்வேறு பேருந்து விபத்துக்களில் 18 பேர் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. அதேபோல ஆந்திராவில் ஆம்னி பேருந்து இரவு நேர பயணத்தின் போது தீப்பற்றி எரிந்ததில் 20 பேர் உயிரிழந்தது பெரும் பரபரப்பு ஏற்படுத்தி இருந்தது.

Advertisment

இந்நிலையில் மதுரையில் இருந்து கேரள மாநிலம் எர்ணாகுளம் நோக்கிச் சென்ற சுற்றுலாப் பேருந்து ஒன்றில் இரவு நேரத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. பேருந்தில் இருந்த பயணிகள் 45 பேரும் உடனடியாக பேருந்தில் இருந்து வெளியேறினர். இதனால் அனைவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். தீயணைப்புத்  துறையினருக்கு தகவல் கொடுப்பதற்கு முன்பாக பேருந்தும் முழுமையாக எரிந்து சேதமானது. பின்னர் வந்த தீயணைப்பு துறையினர் தண்ணீரை பீய்ச்சியடித்து தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். பேருந்தின் டயர் வெடித்ததில் இந்த தீ விபத்து ஏற்பட்டதாக போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இருப்பினும் தொடர்ந்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisment