நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த ஜனவரி மாதம் 28ஆம் தேதி (28.01.2026) காலை 11 மணியளவில் தொடங்கியது. இந்த கூட்டத்தொடர், வரும் ஏப்ரல் மாதம் 2ஆம் தேதியுடன் நிறைவடைய உள்ளது. இதன் ஒருபகுதியாக குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றினார். இதனையடுத்து நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் தொடக்கத்தின் அடையாளமாக நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி ஜனவரி மாதம் 29ஆம் தேதி (29.01.2026) உரையாற்றினார்.

Advertisment

அப்போது அவர், “நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், நாட்டின் முதல் நிதியமைச்சர் ஆவார். தொடர்ந்து 9வது முறையாக நாடாளுமன்றத்தில் பட்ஜெட்டை தாக்கல் செய்யும் நாட்டின் முதல் பெண் நிதியமைச்சர் ஆவார். இது நாட்டின் நாடாளுமன்ற வரலாற்றில் ஒரு பெருமைமிக்க தருணமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது” எனத் தெரிவித்திருந்தார். இத்தகைய சூழலில் தான் பட்ஜெட் தாக்கலுக்கு முன்னதாக நிதி அமைச்சக செயலாளர்களுடன் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்வுவை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று சந்தித்து பேசினார். 

Advertisment

அப்போது நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இனிப்பு வழங்கி ஊட்டிவிட்டார். இந்நிலையில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், 2026 - 2027ஆம் நிதி ஆண்டிற்கான மத்திய மத்திய பட்ஜெட்டை இன்று (01.02.2026) காலை 11 மணியளவில் மக்களவையில் தாக்கல் செய்து உரையாற்றினார். அப்போது அவர், “12 ஆண்டுகளுக்கு முன்பு நாங்கள் (பா.ஜ.க.) பதவியேற்றதிலிருந்து, நாட்டின் பொருளாதாரப் பாதை நிலைத்தன்மை, நிதி ஒழுக்கம், நிலையான வளர்ச்சி மற்றும் மிதமான பணவீக்கம் ஆகியவற்றால் குறிக்கப்பட்டுள்ளது. நிச்சயமற்ற தன்மை மற்றும் இடையூறுகள் நிறைந்த காலங்களிலும் கூட நாம் எடுத்த முடிவின் விளைவாக இது அமைந்துள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.