தமிழகம் முழுவதும் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த நடவடிக்கையை (எஸ்.ஐ.ஆர்) கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 4ஆம் தேதி முதல் டிசம்பர் 14ஆம் தேதி வரை தேர்தல் ஆணையம் நடத்தி வந்தது. அதன்படி, அனைத்து வீடுகளுக்கும் அரசியல் கட்சிகளின் பூத் ஏஜெண்ட்கள் துணையோடு தேர்தல் ஆணைய அதிகாரிகள், வாக்காளர்களை கணக்கெடுக்கும் பணியை மேற்கொண்டு வந்தனர்.

Advertisment

அதாவது, எஸ்.ஐ.ஆர் படிவங்களை வீடு வீடாக கொடுத்து இடம்பெயர்ந்தவர்கள், ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் வாக்காளர்களாக உள்ளவர்கள், படிவங்களை நிரப்பாதவர்கள், ஆவணங்களை வழங்காதவர்கள் ஆகியவற்றவர்களை கண்டறிந்து திருத்தப் பணிகளை மேற்கொள்ளப்பட்டது. மேலும் வாக்காளர்களாக உள்ளவர்களிடம் இருந்து பெற்ற எஸ்.ஐ.ஆர் படிவங்களை நிரப்பி அதை பதிவேற்றம் செய்யும் பணியும் நடந்து வந்தது. அதனை தொடர்ந்து, தமிழகம் முழுவதும் மாவட்ட வாரியாக வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த டிசம்பர் மாதம் 19ஆம் தேதி வெளியானது.

Advertisment

இதனையடுத்து வரைவு வாக்காளர் பட்டியலில் இடம்பெறாதவர்கள், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கான புதிய விண்ணப்பத்தை ஜனவரி 18ஆம் தேதிக்குள் அளிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது. அதன்படி, வரைவு வாக்காளர் பட்டியலில் நீக்கப்பட்ட பெயர்களை சேர்க்கும் விதமாக தமிழகம் முழுவதும் முகாம் நடத்ததப்பட்டது. அதன் தொடர்ச்சியாக தமிழ்நாட்டின் இறுதி வாக்காளர் பட்டியல் பிப்ரவரி 17ஆம் தேதி வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டது. இருப்பினும் அதன் பின்னர் தமிழ்நாட்டில் இறுதி வாக்காளர் பட்டியல் பிப்ரவரி 23ஆம் தேதி வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டது. 

eci-archana-patnaick

இந்நிலையில் தமிழகத்தில் மாவட்ட வாரியாக இறுதி வாக்காளர் பட்டியலை அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் (மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்கள்) இன்று (23.02.2026) வெளியிட்டனர். அதாவது அனைத்து அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டன. அதன் தொடர்ச்சியாக ஒட்டுமொத்த தமிழக அளவிலான இறுதி வாக்காளர் பட்டியலைத் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரியும், அரசு செயலாளருமான அர்ச்சனா பட்நாயக் சென்னை தலைமைச் செயலகத்தில் வெளியிட்டார். அப்போது அவர் அளித்த பேட்டியில், “எஸ்.ஐ.ஆர் பணிகளுக்குப் பிறகு தமிழகத்தின் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 5 கோடியே 67 லட்சத்து 7 ஆயிரத்து 380 ஆகும்.  இதில் ஆண் வாக்காளர்கள் 2 கோடியே 77 லட்சத்து 38 ஆயிரத்து 925 பேரும், பெண் வாக்காளர்கள் 2 கோடியே 89 லட்சத்து 60 ஆயிரத்து 838 பேரும், மூன்றாம் பாலினத்தவர்கள் 7 ஆயிரத்து 617 பேரும் அடங்குவர். 

Advertisment

அதே சமயம் தமிழகத்தில் எஸ்.ஐ.ஆர் மூலம் சுமார் 74 லட்சத்து 7 ஆயிரம்  லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.  அதாவது  கடந்த ஆண்டு சுமார் 6.41 கோடி வாக்காளர்கள் இருந்த நிலையில், எஸ்.ஐ.ஆர் பணிகளுக்குப் பிறகான இறுதி வாக்காளர் பட்டியலில் சுமார் 5.67 கோடி வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர். இறுதி வாக்காளர் பட்டியல் வெளியானாலும், வாக்காளர்கள் தங்களது பெயர்களைச் சேர்க்கவும், திருத்தங்கள் மேற்கொள்ளவும் தற்போது கூட விண்ணப்பிக்கலாம்” எனத் தெரிவித்துள்ளார்.