திரைப்பட தயாரிப்பாளர் ஏ.வி.எம். சரவணன் காலமானதாகத் தகவல் வெளியாகி உள்ளது
Advertisment
தமிழ்த் திரைப்பட தயாரிப்பு உலகில் மிகவும் புகழ்பெற்றது ஏ.வி.எம். படத் தயாரிப்பு நிறுவனம். ஆவிச்சி மெய்ப்ப செட்டியார் என்பவரால் தொடங்கப்பட்ட இந்நிறுவனத்தை ஏ.வி.எம். சரவணன் (வயது 86) நிர்வகித்து வந்தார். இத்தகைய சூழலில் தான் ஏ.வி.எம். சரவணன் வயது மூப்புக் காரணமாக இன்று காலமானதாகத்  தகவல் வெளியாகியுள்ளது. இதனையடுத்து அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காகக் காலை 7 மணி முதல் ஏ.வி.எம். ஸ்டுடியோவின் மூன்றாவது தளத்தில் வைக்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவரது மறைவு தமிழ் திரையுலகில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதோடு இவரது மறைவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் திரையுலகினர் எனப் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 
Advertisment
இதனையடுத்து அவரது  இறுதி மரியாதைக்குப் பிறகு இன்று பிற்பகல் 3 மணி அளவில் ஏ.வி.எம். மாயானதில் அவரது உடல் தகனம் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர் சம்சாரம் அது மின்சாரம், மின்சார கனவு என பல்வேறு வெற்றிப் படங்களைத் தயாரித்தவர் ஆவார். தமிழக அரசின் கலைமாமணி விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளையும் பெற்றுள்ளார். நேற்று தனது பிறந்த நாளை கொண்டாடிய நிலையில் இன்று காலை அவர் காலமானது திரைப்படத்துறையில் மேலும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.