Film director Velu Prabhakaran passes away Photograph: (velu prabagaran)
பிரபல திரைப்பட இயக்குனரும், நடிகருமான வேலு பிரபாகரன் காலமானார். கொட்டிவாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் இன்று (18/07/2025) காலை அவர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
ஒளிப்பதிவாளராக சினிமாவில் பயணத்தை தொடங்கிய வேலு பிரபாகரன், 1989 ஆம் ஆண்டு வெளியான திகில் படமான 'நாளைய மனிதன்' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். 'நாளைய மனிதன்' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அதிசய மனிதன், கடவுள், புரட்சிக்காரன் உள்ளிட்ட பல்வேறு படங்களை இயக்கியுள்ளார். தன் படங்களில் மூடநம்பிக்கை ஒழிப்பு குறித்த கருத்துக்களை அதிகம் பதிய வைத்துள்ளார்.
தான் இயக்கிய 'காதல் கதை' என்ற திரைப்படத்தின் நாயகியை தன்னுடைய 60 ஆவது வயதில் கடந்த 2017 ஆம் ஆண்டு வேலுபிரபாகரன் இரண்டாவது திருமணம் செய்துகொண்டது சர்ச்சையையும் விமர்சனத்தையும் ஏற்படுத்தி இருந்தது. அதனைத் தொடர்ந்து பல்வேறு திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களிலும் நடித்து வந்தார்.
இந்நிலையில் மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த வேலு பிரபாகரன் சிகிச்சைப் பலனின்றி இன்று காலை உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. அவரது மறைவுக்கு திரையுலகினர் பலரும் தங்களது இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.