கடலூர் மாவட்டம் புவனகிரி காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளராக பணியாற்றி வருபவர் லட்சுமி. இவர் கடந்த சில மாதங்களாக சென்னை, திருப்பூர், கோவை உள்ளிட்ட மாவட்ட்ங்களைச் சேர்ந்தவர்களுக்கு, கடலூர் மாவட்டத்தில் அவர்களின் சொத்துக்களின் பத்திரம் காணாமல் போனதாக அதிகமாக வழக்குப்பதிவு செய்துள்ளார். இதற்காக பல லட்சம் ரூபாய் பெற்றதாக கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமாருக்கு தகவல் வந்தது. அதன் பெயரில் இதுகுறித்து ஆய்வு மேற்கொண்டனர். அப்போது இவர் சி.எஸ்.ஆர் வழங்கியது உண்மையென தெரிய வந்தது. 

Advertisment

அதன் பின்னர் அவர் இது குறித்து விழுப்புரம் சரக்கு உமாவிற்கு தகவலை தெரிவித்தார். அதன் அடிப்படையில் இவர் ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். ஆய்வாளர் லட்சுமியின் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து காவல்துறை உயர் அதிகாரிகளின ரகசிய விசாரணை மேற்கொண்டனர். அப்போது சி.எஸ்.ஆர் பெற்ற சம்பந்தப்பட்ட நபர்களிடம் விசாரித்தனர். அப்போது இது போலியானது உள்நோக்கம் கொண்டது என தெரியவந்தது. இதனையடுத்து கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் டிஐஜிக்கு சம்பந்தப்பட்ட ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்தார். 

Advertisment

அதன் பெயரில் அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். கடலூர் மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக காவல்துறையினர் குட்கா போதை பொருட்கள, தடை செய்யப்பட்ட ஆன்லைன் லாட்டரி சீட்டுகளுக்கு விற்பனையை தடுக்க தவறியதால் டிஎஸ்பி, இன்ஸ்பெக்டர், உதவி இன்ஸ்பெக்டர், காவலர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அதேபோல் தற்போது போலி சி.எஸ்.ஆர் வழங்கியதில் புவனகிரி காவல் ஆய்வாளர் பணி நீக்கம் செய்யப்பட்டது கடலூர் மாவட்ட காவல்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.