female Home Guard member action against Frequent accidents on Unmarked speed bumps
புதுக்கோட்டை மாகநகரில் வாகனங்ளின் வேகத்தைக் குறைக்க, கடந்த 2024 ஏப்ரல் 2 வது வாரம் தொடக்கத்தில் மாநகராட்சி பணியாளர்கள் நள்ளிரவில் நேரத்தில் பேருந்து நிலையம் செல்லும் பிரதான சாலைகளில் திடீரென உயரமான வேகத்தடைகளை அமைத்துவிட்டுச் சென்றனர். திடீரென அமைக்கப்பட்ட வேகத்தடையை அடையாளம் காட்ட வெள்ளைக் கோடுகள் போடவில்லை.
அன்றே, நெடுவாசல் கிராமத்தைச் சேர்ந்த திருச்சி திருவரம்பூர் 2ல் காவல் ஆய்வாளராக இருந்த பிரியா, தன் குழந்தைகளைப் பார்க்க இரவு நேரத்தில் புதுக்கோட்டைக்கு பேருந்தில் வந்தவரை அவரது கணவர் பைக்கில் வீட்டிற்கு அழைத்துச் சென்ற போது அடையாளமில்லாத திடீர் வேகத்தடையில் தவறி விழுந்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அதன் பிறகு அடையாளக் கோடுகள் போடப்பட்டது. ஆனால், அதன் பிறகு சில மாதங்களாக எந்த வேகத்தடையையும் கண்டுகொள்ளவில்லை. இதனால் பல விபத்துகள் ஏற்பட்டு பலர் சிகிச்சை பெற்றுள்ளனர்.
இந்த நிலையில், தான் அந்தப் பகுதியில் பணியில் இருக்கும் ஊர்காவல் படை பெண் சரோஜா, அடிக்கடி விபத்துகள் நடப்பதை நேரில் பார்த்து அதனை வீடியோக்களாகவும் பதிவு செய்து சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் சில அரசியல்வாதிகளிடமும் வேகத்தடைக்கு வெள்ளை கோடு போடச் சொல்லி கோரிக்கை வைத்துள்ளார். ஆனால் அதனை அதிகாரிகள் உள்ப்ட யாரும் கணடுகொள்ளாததால் நேற்று (24-02-26) இரவு தானாக களமிறங்கி ஒரு வாளியில் வெள்ளை வண்ணத்துடன் வந்து 4 ரோடு சந்திப்பில் அடிக்கடி விபத்து நடக்கும் வேகத்தடைக்கு அடையாள வெள்ளைக் கோடுகளை போட்டுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவும் நிலையில் ஊர்காவல்படை சரோஜாவுக்கு பாராட்டுகள் குவிகிறது.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2026/02/25/speed-2026-02-25-17-26-54.jpg)
இது குறித்து சரோஜா நம்மிடம் பேசியதாவது, ‘திடீர்னு போடப்பட்ட வேகத்தடையில் ஒரு காவல் ஆய்வாளர் விழுந்து உயிரிழந்தார். அதன் பிறகு நான் பணியில் இருக்கும் போதே பல விபத்துகளை நேரில் பார்த்திருக்கிறேன். அந்த விபத்தில் காயமடைந்தவர்களை வீடியோ எடுத்து புகாரும் கொடுத்தேன், நடவடிக்கை இல்லை. பல மாதங்களாக அடையாளம் இல்லாமல் தான் வேகத்தடை உள்ளது. அதனால் இரவு நேரத்தில் போக்குவரத்து குறைந்த பிறகு, நான் வந்து அடையாள வெள்ளை கோடுகள் போட்டு அடையாளத்தை ஏற்படுத்தினேன். அதை அந்த நேரம் வந்த செய்தியாளர் கண்ணன் வீடியோ எடுத்து வெளியில் பரவிவிட்டார். இப்ப என்னை பலரும் பாராட்டுகிறார்கள். இதே போல நகர் முழுவதும் விபத்துகளை தவிர்க்க வேகத்தடைகளுக்கு அடையாள வெள்ளை கோடுகள் போடப் போறேன்’ என்றார்.
Follow Us