தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகியில் உள்ள பின்னவாசல் கிராமத்தைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணுக்கு கடந்த 3ஆம் தேதி இரவு உடல் நலக்குறைவால் ஆபத்தான நிலையில்  அவரது உறவினர்கள் ஒரு பைக்கில் ஏற்றி பேராவூரணி கொண்டு சென்றனர். அப்போது ராமேஸ்வரம் - தாம்பரம் விரைவு ரயில் செல்ல பின்னவாசல் - சித்தாதிக்காடு ரயில்வே கேட்ட மூடப்பட்டது. ரயில்வே கேட் மூடப்பட்டிருப்பதைப் பார்த்த இளம்பெண்ணின் உறவினர்கள், கேட்டை திறங்கள் மருத்துவமனைக்கு போகனும் என்று சொல்ல, கேட் கீப்பரான இளம் பெண் ஸ்டெலிபினோ, ‘ரயில் ஆயிங்குடியை தாண்டிருச்சுண்ணா கேட் திறக்க முடியாது’ என்று கூறியுள்ளார்.

Advertisment

அதற்கு, ஒரு உயிரும்மா என்று உறவினர்கள் சொல்ல, ‘என்னை நம்பி பல உயிர்கள் ரயில்ல வருதுண்ணா, என் பைக் அந்தப் பக்கம் நிற்குது அதை எடுத்துகிட்டு ஆஸ்பத்திரி போங்க’ என்று கலங்கிய குரலில் கூறினார். உடனே ஆபத்தான நிலையில் இருந்த பெண்ணை தூக்கிக் கொண்டு தண்டவாளத்தை கடந்து கேட் கீப்பரின் பைக்கில் செல்தற்குள், அவர்களின் உறவினர் ஒருவர் பைக்கில் வந்ததும் அந்தப் பைக்கில் தூக்கிச் சென்றனர். தற்போது அந்த வீடியோ வைரலான நிலையில், அந்த இளம்பெண்ணான கேட்கீப்பரை ரயில்வே அதிகாரிகள் பாராட்டி வருகின்றனர்.

Advertisment

மேலும் ஆதனூரைச் சேர்ந்த இந்த கேட் கீப்பரின் தாத்தா கேங்மேன், அவரது வ்அப்பா அன்பானந்தம், பெரியப்பா அந்தோணிராஜ் ஆகியோர் கேட் கீப்பர். அந்த குடும்பமே ரயில்வேயில் வேலை செய்தவர்கள். அந்த வகையில் ஸ்டெலிபினும் தற்போது கேட் கீப்பராக உள்ளார் என்றனர். ஒருவருக்காக கேட்டை திறக்கும் போது ரயில் வந்தால் எத்தனை ஆபத்து என்பதை கடமை உணர்வோடு பார்த்த இளம் கேட் கீப்பரை பாராட்டலாம். மேலும் இனி மேல் அந்த பெண் கேட் கீப்பருக்கு பாதுகாப்பு வேண்டும். இரவு பணிகளை தவிர்க்க துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கின்றனர் உறவினர்கள்.