உத்தரப்பிரதேச மாநிலம் கோசாம்பி மாவட்டம் ஹரானா கிராமத்தைச் சேர்ந்தவர் பிரிஜேஷ் குமார். இவரது மனைவி மம்தா தேவி. இந்த தம்பதியினருக்கு ஆறு மாதங்களுக்கு முன்பு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. இந்த நிலையில் மம்தா தனது குழந்தையை வீட்டில் உள்ள யாருக்கும் தெரியாமல் அனிதா என்ற பெண்ணிடம் நேற்றைக்கு முன் தினம் 95 ஆயிரம் ரூபாய்க்கு விற்றுள்ளார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த பிரிஜேஷ் அதிர்ச்சியடைந்தார். 

Advertisment

உடனடியாக, பிரிஜேஷ் சம்பவம் குறித்துக் காவல் நிலையத்தில் புகாரளித்தார். புகாரின் அடிப்படையில்,  மம்தாவிடம் விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் குழந்தை பணத்திற்காக விற்பனை செய்யப்பட்டுள்ளதை உறுதி செய்தனர். இதையடுத்து, காவல்துறையினர் தீவிர நடவடிக்கையின் மூலமாகக் குழந்தையை அனிதாவிடம் இருந்து குழந்தையை மீட்டனர். 

Advertisment

இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மம்தா மற்றும் அனிதாவைக் கைது செய்தனர். இந்த சம்பவம் குறித்துத் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும், பெற்ற தாயே பணம் வாங்கிக்கொண்டு தனது பச்சிளம் குழந்தையை விற்பனை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதே வேளையில் புகார் அளித்த 24 மணி நேரத்திற்குள் குழந்தையை மீட்ட காவல்துறையின் தீரச் செயலை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.