விழுப்புரத்தில் மது அருந்துவதற்கு பணம் தராததால் தந்தையை மகனே அடித்துக்கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Advertisment

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி பகுதியில் வசித்து வருபவர் சடையாண்டி. இவருடைய மகன் மருதாச்சலம் கூலி வேலை செய்து வரும் நிலையில் சம்பவத்தன்று வீட்டிற்குச் சென்று மது அருந்துவதற்கு பணம் கேட்டு தகராறில் ஈடுபட்டுள்ளார். தந்தை சடையாண்டியோ தன்னிடம் பணம் இல்லை எனக் கூறியதைத் தொடர்ந்து ஆத்திரமடைந்த மருதாச்சலம் அருகில் கிடந்த கட்டையை எடுத்து தந்தையை தலையில் கொடூரமாகத் தாக்கியுள்ளார்.

Advertisment

இதில் சம்பவ இடத்திலேயே தந்தை சடையாண்டி உயிரிழந்தார். உடனடியாக செஞ்சி காவல் நிலையத்திற்கு தகவலளிக்கப்பட்ட நிலையில் அங்கு வந்த போலீசார் சடலத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவத்தில் கொலையில் ஈடுபட்ட மருதாச்சலத்தை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். மதுவிற்காகப்  பணம் கேட்டுத் தராததால் மகனே தந்தையை கட்டையால் அடித்துக்கொன்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.